Tuesday 3 January 2012

என்னவென்று நினைத்தாய் தமிழனை..???



என்னவென்று நினைத்தாய் தமிழனை..???

கொளுத்தி போட்ட
" தீ " குச்சி என்று
நினைத்தாயோ...?
தமிழன் எரிமலையாட...!

வெடித்து சிதறினால்
உன் பல  தலைமுறை
தாங்காது..!

அடுத்து
நீ
வைக்க போகும்
அடுத்த அடியை
யோசித்து வை,
என்
தமிழகத்தில் இருப்பது
மண் அல்ல
தீ பிழம்பு,

திராவிட மாநிலங்கள்
நான்கு இருந்தும்
திராவிடம்
போற்றும் ஒரே
மண் என்
தமிழ் மண்ணடா,

பசி என்று வா
இலை போடுவோம்..!
தமிழனை
ருசி பார்க்க
எண்ணி வந்தால்..,
எங்கள் உலையில்
நீ கொதிப்பாய்
ஜாக்கிரதை...!

அமைதி காத்தே
 பல லட்சம்
சொந்தங்கள்
இழந்துவிட்டோம்
பீரங்கி பசிக்கும்,
துப்பாக்கி பசிக்கும்,
பலி கொடுத்தோம்,..!

முத்துகுமரனும்,
செங்கொடியும்,
நாராயணனும்...,
எங்கள் உயிரில்
கலந்து போனவர்கள்,
காலம் சென்றவர்கள் அல்ல...!

ஒதுங்கிப் போனால்
ஓங்கி அடிப்பாயோ..!
எதிர்த்து நின்றால்
ஏன் ஓடி
ஒளிகிறாய்...???

பிழைக்க வா
தமிழகத்திற்கு
பிழைக்க வைப்போம்,
பிழைத்துக்கொள்,
பின்னால்
அடித்தால்..?
பிடரி சிலிர்ப்போம்
பீதியில்
நீ
மடிவது சத்தியம்...,

அன்பாய் இருந்தால்
தமிழன் உனக்கு அடிமை,
என்பதை இன்றோடு
மறந்து விடு,
அன்பிற்கு அடிமையாகி தான்
இன்று
அரை வேக்காடுகளும்
அடிக்க வருகின்றன,

அன்பானாலும் சரி
அடியானாலும் சரி
நீ கொடுப்பதே
உனக்கு
திரும்ப கிடைக்கும்
எதை கொடுப்பது என்று
உன் அரசுடன்
கலந்து பேசி

படைகளத்துக்கு
படையோடு வா,
நாங்கள்
ஒரே ஒரு
" தமிழனை "
அனுப்பி வைக்கிறோம்
முடிந்தால்
மோது......!!!

என்னவென்று நினைத்தாய் தமிழனை..???

            - பிரகாஷ் பாரதி

No comments:

Post a Comment