Wednesday 10 December 2014

கவிதை நாள்



தீபிழம்பின்
முதல் மூச்சு நாள்,
"கவிதை நாள்", ஆம்
தீர்கதரிசியான என் தலைவன்
பிறந்தநாள் இன்று,
விந்தில் ஜனித்து
வீணாய் போகாமல்,
தீப்பொறியில் ஜனித்து
வீரனாய் நின்றவன் நீ
என் தலைவா..!
தாயிழந்த குழந்தையானாலும்,
தமிழை தாயாய் ஏற்று,,
தரணியெங்கும் தடம் பதித்தாய்,
தமிழால் நீ பிழைக்கவில்லை
தமிழல்லவா உன்னால் பிழைத்தது,
தகுதியற்ற மனிதர்களை
தலைவன் என்று
தம்பட்டம் அடிக்கும்
தமிழ்நாட்டில், நான்
திமிராய் கூறுவேன்:என்
தலைவன் "பாரதி" என்று,
தலைகனத்தோடு சொல்வேன்
இன்று என் "தலைவன்",
பிறந்த நாள் என்று..!

                                       - இளையபாரதி 

Tuesday 9 December 2014

தீட்டாகிப்போனது...!


மயிருக்கு சமமானவனுக்கு
மணி மகுடம்,
பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பு,
போதும் போதும்..
மாதவிடாய் காலத்தில் 
தீட்டென கூறி
என் குல பெண்களை
ஒதுக்கி வைக்கும்
மடமை மிகுந்த
புண்ணியர்களே: இனி
நாட்டை விட்டு
ஒதுக்கி வையுங்கள்
அந்தக் கோவிலை
தீட்டாகிப்போனது
அந்த பணக்காரக் கோவில்...!
                   
                                         - இளையபாரதி