Saturday 7 January 2012

தோழியே..!

தோழியே..!

கலக்கம் எதற்கு..?

கை கோர்த்து நடக்க
உனக்கு நட்புக்கள் 
இருக்கையிலே..!

துக்கமும்...
துயரமும்...
உன் விழி மறைத்தால்..,
கண்ணீர் துடைத்து
உன் தலை
சாய்க்க
உன் " அப்பா " தோள்கள்
இருக்கையிலே..?

நித்தமும்
நித்திரை
தொலைத்து..,
நிலவு காட்டி
உனக்கு நித்திரை 
வழங்க 
உன் தாய்
இருக்கையிலே..!

பாரதியின்
பாடல் கேட்டு
வளர்ந்தவள் அல்லவா
நீ..!

இன்று நீ
மண் புழுவாய்
நெளிவது எதற்கு..?

எதை இழந்தாய்..?

எப்படி இழந்தாய்..?

ஒரு கணம் யோசி..,
உன் மனம்
சொல்வதை கேள்..,

நடை போடு,
வழியில்....!
வெறிகொண்ட
நாய்களையும்
பேய்களையும்
நசுக்கி விட்டு போ...!

ஒரு பாதை தெளிவானது,

ஒரு பாதை குழப்பமானது,

குழம்பினால் மட்டுமே
தெளிவாக முடியும்,
ஆனால்
குழப்பம் மட்டுமே இருந்தால்
தெளிவு
பிறக்க வழி ஏது...?

தைரியமான
பாதையில்
தளராது
நடந்து போ..!

தடுக்க ஆள் இல்லை..

உன்னை ஒடுக்கவும்
ஆள் இல்லை ..!

தெளிவான நடை பயில்...!
       
                           - பிரகாஷ் பாரதி

 

1 comment:

  1. பாரதியின் சீடனாய் சீருகிறாய் கவிதையாய் வார்த்தையில் அருமை...

    ReplyDelete