Tuesday, 29 May 2012

!!!...நான்...!!!
என்னை
என் வாழ்கையை
வாழ விடுங்கள்..,அப்பா..!

மழைக்கு கூரை தேடி
ஒதுங்குபவன் அல்ல நான்,
பெய்யும் மழையின்
இடுக்கில் ஓடி
நனையாமல் வர நினைப்பவன்..!அப்பா..!

தீயில் தித்திப்பை
தேடுபவன் அம்மா..!நான்,..!

மனிதம் பேச நினைக்கிறேன்
என்னிடம் மதம் பேசாதீர்கள்..அம்மா..!

இயந்திர வாழ்கை ஆகவில்லை
அப்பா..! எனக்கு

நான் இயற்க்கை எய்தும் முன்
இமயம் தொட்டுவிடும்
ஆசை இல்லை அப்பா..!
ஆனால் என் இதயத்தில்
இருப்பதை இறக்கிவைக்க
பேராசை படுகிறேன்..!

மூட நம்பிக்கை
உங்கள் மூளையை
பிளந்து வழியும் போது..,
பார்த்துக்கொண்டிருக்க நான்
பழகவில்லை அப்பா..!
" பாரதி " யின் பாடல் மட்டும்
படிக்கவில்லை நான்,,,
அவர் வாழ்க்கையையும் தானே
படித்திருக்கிறேன்..!

காதலில் தோற்று
மற்றுமொரு கன்னியின்
கை பிடிக்கும்
கயவன் அல்ல அம்மா நான்,,.!
மீண்டும் காதலிக்கிறேன்
அதிகம் காதலிக்கிறேன்
என் கவிதைகளை..
இந்த வாழ்கையை..!!!

எனக்கு
வட்டமிட்டுக்கொள்ள
நான் விரும்பவில்லை..!அப்பா..!!!
நான் வட்டமல்ல
தொடங்கிய இடத்தில்
வந்து சேர..!
நான் கோடு..முடிவில்லா கோடு..!!!

எனக்கு வீடு வேண்டாம்...
எனக்கு கூடு போதும்...!
இந்த உலகக்கூடும்...!!
என் உடற்க்கூடும்...!!!

                                      - இளையபாரதி
Monday, 21 May 2012
காதல் கடிதம் எழுத
சொல்லும் கள்ளி !!
எப்படி உனக்கு புரியும்

என் எழுத்து பேசும்
வார்த்தைகள்?

உனக்கு புரிந்தது
நம்
காதல் மொழிதானே?

                     - இளையபாரதி

Thursday, 17 May 2012


நீயும் தீவிரவாதிதான் 
என் உயிர் 
கொல்லும் 
உன் வெட்கம்
நீ வைத்திருக்கிறாய் 
ஆயுதமாக..!!!


                - இளையபாரதி

Tuesday, 15 May 2012


உன் புன்னகை
மறைத்து நீ
சிரிக்கும்
அந்த வெட்க சிரிப்பைதான்
கடன் கேட்க்கின்றன
மலர்கள்..!!!

- இளையபாரதி

நீ என்னை
கேலி செய்துவிட்டு
சிரிக்கும்
நமட்டு சிரிப்பில்தான்
உன் நாணம்
கண்டேன் நான்..!!!

- இளையபாரதி

கீழ விழுந்த
விண்மீன்,
அண்ணார்ந்து தன
சக விண்மீனை
பார்ப்பது போலதான்
நீ படுத்து கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பது..!!!

- இளையபாரதி

" க பு மு "
க பு மு என்றாய்
என்ன..? என்றேன்
கட்டி புடிச்சி முத்தம்
என்றாய்..
ஹ ஹ
நீ கட்டி பிடித்தால்
முக்தி அதுதான்
க பு மு என்றேன் நான்..!!!

               - இளையபாரதி

Monday, 14 May 2012

விரல் எடுத்து
நீ
கடிக்க
ஏமார்ந்து  போனேன்
நான்
நீ
கடித்தது
உன்
விரல்கள் என்பதால்...!!!

                     - இளையபாரதி


" காகிதப் பூக்கள் "மனம் இருந்தும்
மறுத்துப்போன உயிரை
கொண்ட உயிரினங்கள்
நாங்கள்..!!!

மணம் இருந்தும்
மணக்க முடியாத
காகித பூக்கள்
நாங்கள்..!!!

முதிர் கன்னி சகோதரிக்கு
திருமணம்,
நோயாளி தந்தைக்கு
மருத்துவம்,
அடுப்பங்கறை அம்மாவிற்கு
கவுரவம்,
இவற்றிற்காக
தாய் மண்ணை
தொலைத்து வந்து
வாழ்கையை தேடும்
காகித பூக்கள்
நாங்கள்...!!!

தாய்  மண்ணை
தொலைத்த
குற்ற உணர்வு
தாயை தொலைத்த
கொடிய உணர்வு..!!!

 காகிதப் பூக்களாய்
இருப்பதில் ஒரே ஒரு
மகிழ்ச்சி எங்களுக்கு
வாடுவதில்லை
" நாங்கள் "...!!!

" நாங்கள் "
எங்கள்
வீட்டில் அடுப்பெரிய
அயல் நாட்டில்
எங்களை எரித்துக்கொள்ளும்
பூக்கள்
" காகிதப் பூக்கள் "

                           - இளையபாரதி

 
நடு நிசியில் 
நட்சத்திரம் சிந்திய 
ஒலி கேட்க 
திரும்பி பார்த்தால்
" நீ " சிரிக்கிறாய்..!!! 

                  - இளையபாரதி
செதுக்கப்பட்ட சிலையில் 
பறிக்கப்பட்ட குழி 
உன் " கண்ணக்குழி " 

                         - இளையபாரதி


உன் கண்மை எடுத்து 
உன் வியர்வை குழைத்து 
வானத்தில் 
வீசியதே 
" வானவில் " ஆகிப்போனது..!!!

                              - இளையபாரதி

Saturday, 12 May 2012

நீ நீதான் அம்மா..!!!" அம்மா "
உன் தொப்புள்கொடி  அறுத்து
உயிர் பெற்ற எனக்கு
தகுதி இல்லை " அம்மா ",

உனக்கு வாழ்த்து சொல்ல
உயிர் கொடுத்த உத்தமியே..

உன்னை போலே
யார் இங்கே..?"அம்மா
கருவாகி,உருவாகி
ஈன்றெடுத்து..
உலகம் காட்டினாய்
என் உலகம்
நீதானே அம்மா..!

உயர உயர பறந்தாலும்
பருந்தாகத
ஊர் குருவி போலதான் " அம்மா "..!
எத்தனை உறவுகள்
வந்தாலும்,இருந்தாலும்
நீ நீதான் அம்மா..!

எத்தனை மென்மையான
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
உன் மடிக்கு
ஈடில்லை அம்மா..

என் தசை,நரம்புகள்
உதிரம் அனைத்திலும்
எழுதப்பட்டுள்ளது
உன் பெயர் அம்மா.. !

என் உயிரின்
சொந்தக்காரி நீ..
என் சுவாசம்
உன்னிடம்
நான் பெற்ற கடன்..!

கவிதை போதாது
உன் பெருமை பேச...

எதை சொல்லி ஈடு செய்ய
எதை கொடுத்து ஈடு செய்ய
" அம்மா "...
என்ன வேண்டும் அம்மா
உனக்கு..??

உயிரா..? அன்பா..?? பாசமா..??
எதை நீ கேட்டாலும்
அது உன்னிடம் நான்
பெற்றதாகத்தான் இருக்கும்
" அம்மா "..!!!

நீ நீதான்
அம்மா என் அம்மா..!!!
தெய்வத்திற்கு தெய்வம்
அம்மா நீ..!!!

நீ நீதான் அம்மா..!!!

                        -    - இளையபாரதிநீ என்னை
வெட்கத்த்கோடு பார்த்த
முதல் பார்வையில்,
காதலாகிப்போன
அந்த உணர்வு,
நேற்று
நீ என்னை
வேடிக்கையாய் பார்த்தபோது
காலமாகிப்போனது..!!!
                             
                                   - இளையபாரதி

Sunday, 6 May 2012

" ஊடல் "நீ, உன்
உதடுகளை,
சுழித்து
இடப்புறமும்
வலப்புறமும்
அசைத்து,
உன் மூங்கில்
தோள்களை தூக்கி
உன் மயில்,
கழுத்து சுளுக்கிக்கொல்லாமல்,
அசைத்துவிட்டு செல்லும்
அந்த செய்கையை
பார்க்க மட்டுமே
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன் " ஊடல் "
கொள்வேன் நான்...!!!

                                 - இளையபாரதி

Friday, 4 May 2012

கொல்லப்படும் சிசுவின் மரண ஓலம்..!!!
கொல்லப்படும் சிசுவின் மரண ஓலம்..!!!

உங்களால்
நான்  பெற்று
கொள்ளப்படுவேன்
என்று நினைத்தேன்
ஆனால்
பெறாமலே
கொல்லப்பட்டேன்..!அம்மா..!!

கொல்லவா என்னை
சுமந்தாய்..?

அல்லது அடுத்து
பிறக்கப்போகும்
என் தம்பிக்கு
ஒத்திகை
பார்த்தாயா..???

நான் பெண் என
தெரிந்ததால்
என்னை
பிணமாக்கினாய்..!
ஆணாக இருந்திருந்தால்
என்னை
மகனென்று இருப்பாய்..!
வளர்ந்து
நான்
திருநங்கையாகி இருந்தால்
என்ன செய்து இருப்பீர்கள்
அப்பா...??

எந்த ஒரு
பிறப்பிற்கும்
ஆண், பெண்
இருவரும் தேவைதானே..??
பெண்ணை மட்டும்
அழித்துவிட்டால்
ஆண்களை மட்டும்
கொண்டு
கரு தரிக்குமா
இந்த அறிவியல்..???அம்மா..???


எனக்கு கள்ளி பால்
கொடுத்துவிட்டு அழுதீர்களே
அப்பா..!!அம்மா..!!!
பிணமாய் நான்
பிறந்தபின்னாவது
என் உச்சியில்
சிரித்துக்கொண்டே
ஒரே ஒரு
முத்தமிடுங்கள்
பிணம் என்று ஒதுக்காதீர்கள்..!!!
பிணமானாலும்
நான் உங்கள் பிள்ளை..!!!


                          - இளையபாரதி

Thursday, 3 May 2012

நின்றிருந்தது " நீ "மலர் கண்காட்சியில்
குட்டி குழந்தைகள்
ஒரு மலரை
சுட்டி காட்டி
"அந்த பூ
அழகா இருக்கு ",என்று
சொல்லிக்கொண்டிருக்க
திரும்பிப் பார்த்தால்
நின்றிருந்தது
" நீ "
                   
                               - இளையபாரதி

Wednesday, 2 May 2012

நாம் நாமாவது எப்போது..???நாம் நாமாவது எப்போது..???

நாம் நாமாவது எப்போது..???

விபத்தில் சிக்கி
நடுங்கி நடுங்கி
சாக கிடக்கும்
ஓர் உயிரை
வேடிக்கை மட்டும்
பார்த்து செல்லும்
நாம் மனிதனாவதெப்போது..?

சில்லறை சேர்க்க
ஓடிக்கொண்டிருக்கும்
இயந்திர வாழ்வில்
மனிதர்களை நாம்
சேர்ப்பது எப்போது..?

கட்சி வேடமிட்டு
தனிமனிதனுக்கு
வாழ்க முழக்கமிடும்
நாம்,
நம் வாழ்வை
வாழ்வது எப்போது..?

இலவசம் பெற்று
இன்பம் காணும் நாம்,
இலவசங்களை இடறி
அடிப்பது எப்போது..?

இலவசங்கள் நம்மை
சோம்பேறிகள் ஆக்கும்
என மற்றவருக்கு
இசைவது எப்போது..?

குழந்தைக்கு பால்
சுரக்காத மார்பகங்கள்
இருக்கையில்
பால் புட்டி வாங்காமல்
மதிகெட்டு
மதுக் கடைகளில்
மரணத்தை அழைக்கும்
குடி மகன்களே
அவரவர் மனைவியின்
வயிற்றை
நிரப்புவதேப்போது..???


மனைவி இருந்தும்
விபச்சாரி தேடும்
மானம் கேட்டவன்
போல
"தமிழ்" இருக்கையில்
பிற மொழி எதற்கு..?


நம் குடிசைகள்
மாளிகையாவது எப்போது..???

மதுக்கடைகள்
பள்ளிகள் ஆவது எப்போது...???

வாழ்கையை வாழ்வது எப்போது

நம் வாழ்கையை

நான் வாழ்வது எப்போது ..?

நாம் நாமாவது எப்போது..???

                            - இளையபாரதி