Wednesday 20 June 2012




பிழைப்புக்கு பாதை தேடி
பட்டணம் வந்த
பரதேசிகளை ...!
பட்டைஇட்டு பகவான்
இவன்  என்று
பிதற்றுகிறீர்...!!!

பெண்ணிடம் சல்லாபம்
கொண்டாடுபவன் கடவுளாம்...!
"கதவை திற காற்று வரட்டும்"
என்று சொல்லி...
உள்ளே அழைத்து
கதவை பூட்டுபவன்
பிரம்மச்சாரியா..??

போதை போதனைகளை
கேட்க்கும் பேதை
மக்களே
பேடிகளை போற்றும்
புண்ணியவான்களே...!

புழுதியில் படுத்துறங்கியது
போதும் போதும்...!

கடவுள் என்பவன்
இருப்பானாயின்
அவனிடம் நாம்  பேச
போலி தூதர்கள் எதற்கு..??

நேரே நம்மிடம் பேசாத
கடவுள் எதற்கு..??

ஆன்மிகம் இன்று
ஆண்மிகமாகிவிட்டது..!!!

மனிதம் மறந்துவிட்டோம்
மனிதர்களையும் மறுத்துவிட்டோம்
மடையர்கள் போதுமென்று...!

காலப்போக்கில் அரசியல்வாதிகள்
கடவுளாக்கப்படலாம்..,
நடிகர்கள் அதற்க்கு
பூசாரிகலாகலாம்...
எப்படி ஆனாலும்
பேதை மக்களே
நீங்கள்
கடவுளுக்கு உண்டியலிலும்
பூசாரிக்கு தட்டிலும்
பிச்சை போட்டு கொண்டுதான்
இருப்பீர்கள்...!!!

அவர்களையே
வணங்கிக்கொண்டு
அதனால் நீங்கள்
வாழ்வதாக நினைத்துக்கொண்டு...!!!

                                          - இளையபாரதி








Tuesday 19 June 2012


இதயத்தின் ஒரு பக்கத்தில்
கசிந்தாலும்..,
மறுபக்கம்....
இதயத்திற்கே தெரியாமல்
சுரப்பதுதான்
" காதல் "...!!!
                               
-இளையபாரதி

Friday 15 June 2012

"......நட்பு......"








நயவஞ்சகமும் நஞ்சும்
மிகுந்த மனங்களுக்கு
நடுவே...
நெஞ்சம் நிமிர்த்தி
தோள்கள் திமிர
நடை போடுகிறது
களங்கமில்லா
நட்பு...!

காதலி
இருந்தும்...
காதலுக்கும் மேல்
காதலிக்கிறார்கள்
நட்பை..!
காதலிகளுக்கு தெரியாமல்...!

ஒருவேளை மனிதனின்
ஆறாம் அறிவு
இந்த நட்பு தானோ..?

"நீரில்லா நெற்றிப் பாழ்" என்கிறது
ஒரு மதம்...
நட்பில்லா மனிதன்
நடை பிணம் தான் உறுதியாக...,

விலங்குகள் அஃறிணை
மனிதர்கள் உயர்திணை
நண்பன் உள்ளவன்
நட்புத்திணை..
உயர்திணையை விட
உயர்வானவன் என்று
"இனி ஒரு விதி செய்வோம்"


நண்பனுக்காய் உயிர் விட்டவர்கள்
இங்கு இல்லை,
காதலை போலே
உயிர் எடுப்பது அல்ல
நட்பு...
உயிர் காப்பது நட்பு...!

"நட்பு"
இதற்க்கு ஒரு
புது காவியம் எழுத
உலக காகிதங்கள் போதாது...!

நன்றி கூறினால் பிடிக்காது
நன்றி எதிர்ப்பார்தலும் ஆகாது
ஆனாலும்
நன்றி மறக்காது
இந்த "நட்பு"...

எதிர்பாராமல் வரும்,
எதிர்பாரா நேரத்தில் உதவும்
எதிர்பார்க்கா இன்பம்
தரும் இந்த "நட்பு"
எதையும் எதிர்பார்ப்பதில்லை
எவரிடமும்..!!!

தனித்துவிடப்படும் தருணத்தில்
தோல் கொடுத்து
தட்டிக் கொடுக்க
தோழனோ ,தோழியோ இருந்தால்
தோற்ற மனிதன்
உலகில் இல்லை..!!!

அன்பானவன்,பண்பானவன்
என்பதைவிட
நட்ப்பானவன் என்று
பெயரெடுப்போம்...
நட்பை வாழ...!!!

- இளையபாரதி