Wednesday 29 February 2012

உன்,
உள்ளங்கையில்
வியர்த்துகொண்டே,
இருப்பதாக சொல்லி
சலித்துக்கொள்கிறாய்,
ஆனால்
நானோ....
ஆனந்த தாண்டவமிடுகிறேன்...!
வியர்தால்தானே
என்,
சட்டையில்
துடைக்கிறாய்...
உன் வியர்வையை....!!!
                                - இளையபாரதி

Wednesday 22 February 2012


நீ,
என்னை
பார்க்காத வேளையில்,
நான்,
உன்னை
பார்த்துக்கொண்டிருப்பதை,
நீ,
பார்த்துவிட்டால்,
வெட்கப்படுகிறாய்,

நான்
உன்னை
பார்க்காத வேளையில்,
நீ
என்னை
பார்துக்கொண்டிர்ப்பதை,
நான்
பார்த்துவிட்டால்,
ஏனடி
கோபப்படுவதை போல
நடிக்கிறாய்....?

                            - இளையபாரதி

Tuesday 21 February 2012


கானல் நீருக்கும்,
என் கண்களின்
கண்ணீருக்கும்
வித்தியாசம் உண்டா
என்ன..?
பல நேரங்களில்
குடிநீருக்கு
பதிலாக,
கானல் நீர் கண்டு
தாகம் ஆற்றி இருக்கிறேன்...!
இப்போதும் அதைத்தான்
செய்து கொண்டு இருக்கிறேன்...!!!

                                   - இளையபாரதி

Sunday 19 February 2012

தலை குனிந்தது நம் "காதல்"




இடை அனைத்து,
இடைவெளி போக்கி,
நாம் நின்ற வேளையில்,
நம் இதழ்களுக்கு
நடுவே..!
ஊசலாடத் தொடங்கியது
நம் காதல்,
தலை தூக்கியது
 "காமம்"
தலை குனிந்தது
நம் "காதல்"
                                   
                                    - இளையபாரதி

Wednesday 15 February 2012

விதவையானேன் நான்...!!!


விதவையானேன் நான்...!!!

விதவையானேன் நான்...!!!

தலை பிள்ளையிலிருந்து
கடைசி பிள்ளை வரை
பெண்ணாகிப்போன குடும்பம்
என் குடும்பம்..
உடன் பிறந்தோர்
எண்ணிக்கை எனக்கே
தெரியாது,,.!!!

தலை பிள்ளையாய் பிறந்து
தொலைத்தேன்..!

புணர்ந்து புணர்ந்தே,
என் தாயை
புதைத்துவிட்டார்
என் அருமை தந்தை,,.

கடமையை செய்தாராம்....!!!
என்னை அவர் வயது
உடைய ஒரு கிழவனுக்கு
என்னை க(கூ)ட்டி கொடுத்து...

வலி வலி வலி
மட்டுமே
என் வாழ்கை..!

கனவுகளில் மட்டும்
சிரித்துக்கொண்டிருக்கும்
கேவலமான வாழ்கை..,

மணமான மறுமாதம்
மறித்துப்போனார்
என் கிழக் கணவன்..!

தனியானேன்,
பாதி பிணமானேன்,

சமூகத்தின் சாக்கடை
பார்வைக்கு
நான் மட்டும்
என்ன விதிவிலக்கா..??

மளிகை கடைக்காரன்
என் மஞ்சத்தில்
இடம் கேட்கிறான்,,.!

பூசாரி கருவறைக்கு
அழைக்கிறார்
என்னை
கருத்தரிக்க வைக்க..,

நட்பாய் சிரித்துவிட்டால்
நடையாய் நடக்கின்றன
நரிகள்,..என் வீட்டு தெருவில்,,.,

கொடுமை சமுதாயம்..!
வாழ்கை பறிகொடுத்த
என்னுடன்
மன்னிக்கவும்
என் தேகத்துடன்
வாழ நினைக்கிறது...,

" பாரதி " இந்த மண்ணில்
பிறந்தவன் தானே,
அவன் பெண்களை
பார்த்த பார்வை,
ஏன் உங்களுக்கு
இல்லாமல்  போனது..???

வாழ்கையை வாழ
விரும்புகிறேன்..,
என்னை வேசியாக்க
முயற்சிக்காதீர்கள்,,.

விதி விளையாடியது
இனி
விதியோடு நான்
விளையாட விருக்கிறேன்,,.

ஊருக்கு " ராமன் " ஆனவர்களே..!
தள்ளி நில்லுங்கள்
என் பார்வை உங்களை
போசுக்ககூடும்,,.!
இதோ,
புறப்படுகிறேன்
என்
பெயரை மாற்றி
" பாரதி " என்று...!!!
                                     - இளையபாரதி













Monday 13 February 2012

********* குழந்தை தொழிலாளி ************


********* குழந்தை தொழிலாளி ************

கொஞ்சம் நேரம்
ஒதுக்குங்கள்
எங்களைப்பற்றி சிந்திக்க,

கருத்தரிக்கும்போதே
கல் உடைப்பதர்ற்கு
என்று எழுதப்பட்டவர்களோ
நாங்கள்..???

இல்லை இல்லை...

கல் உடைப்பதற்கு
என்றே
பெற்றெடுக்க பட்டவர்கள்..!!!

பட்டாசு கொளுத்தி
பரவசம் அடையும்
நீங்கள்..!
சிந்தித்தது உண்டா..?
பட்டாசுக்கள் பூவாய்
வெடிப்பது...
எங்கள் புன்னகை என்று..???

கருகிக்கொண்டு இருப்பது
எங்கள் கைகள் மட்டுமல்ல...!!!
வாழ்க்கையும்தான்...!!!

நீங்கள் உண்டுபோன
மேசை துடைத்து
வாழ்கிறோம்..,
எங்கள் கண்ணீர்
துடைக்க விரல்கள் ஏது..?

கொஞ்சம் எங்களை
திரும்பி பாருங்கள்,
உங்கள் பிள்ளைகளின்
முகம் தெரியக்கூடும்..!!!

பிறக்காத
பேரன் பேத்திகளுக்காக,
அணு உலைக்கு
ஆட்சேபம் தெரிவிக்கிறீர்கள்,
தெருவோரம்
குப்பை பொறுக்கும்
எங்களை
குப்பையாகத்தானே
பார்க்கிறீர்கள்..!!!

துரித உணவகம்
தேடி ஓடும்
எங்கள் அன்பு மக்களே..!!!
எங்கள் துயர் துடைக்க
நீங்கள் வருவது எப்போது..?

பிறவியில் பார்வையற்றவனுக்கு
வண்ணங்களை
விவரிப்பது போலத்தான்
உங்களுக்கு
எங்கள் வாழ்கையை
புரிய வைப்பது...!!!

வாய் பேச முடியாதவன்
தன் கனவை
விளக்குவது
போலத்தான்,
எங்கள் வாழ்வை,
உங்களுக்கு விளக்க
நினைப்பதும்..!!!


துளி நம்பிக்கையில்தான்
கைகள் காய்க்க
வேலை செய்கிறோம்,
நாளை எங்கள்
பிள்ளைகள்
கல்வி கறப்பார்கள் என்று...!!!
                                     
                                      - இளையபாரதி

Sunday 5 February 2012

நாம்,
தினமும்,
சந்தித்துக்கொண்ட
இடத்தை
மறக்க முடியாமல்,
தினம்,
ஒருமுறை சென்று,
அமர்ந்துவிட்டு தான்
வருகிறேன்,
தினமும் நம்மை
பார்த்த
"பூ" விற்கும்
சிறுமி சிரித்துகொண்டே
கேட்கிறாள்,

"என்ன அண்ணா
இப்பலாம் தனியாவே
வறீங்க..?.
"நீங்க,
அவங்க கூந்தலுக்கு
"பூ" வாங்கி
வச்சீங்க,
அவங்க உங்க
காதுல "பூ" சுத்திடாங்க போல"..?
கண்ணீரோடு,
நான் கூறினேன்
"அவ என் காதுல
" பூ " சுத்தலம்மா,
என் காதலுக்கு " பூ "
சுத்திட்டா...
அவ வாழ்க்கைக்கும்
சேர்த்து சுத்திக்கிட்டா..."
மெல்ல நகர்ந்தாள்
சிறுமி என்
தோல்களை தட்டிக்கொடுத்துவிட்டு
கண்ணீரோடு...!!!
                                   - இளைய பாரதி

Thursday 2 February 2012

புரிந்து கொள்ளடி கள்ளி...!


புரிந்து கொள்ளடி கள்ளி...!

சொல்லில் அடங்காத
காதல்
நம் காதல்,
சொல்லி அடங்காத
காதலும் கூட,

ஊடல் காதலில்
தடுக்க முடியாத ஒன்று,
நம் காதல்
ஊடலினால்
சிதைக்க முடியாத ஒன்று,

நீ,
சொல்வதெல்லாம்
சரி என்கிறாய் நீ,
நீ சரி என்பதை எல்லாம்,
சரி என்கிறேன் நான்,
தவறு என்று தெரிந்தும்..!

நீ
கசக்கி போட்ட
காகிதமும்
கவிதை புத்தகமாக
தெரிகிறது எனக்கு,
நீயோ,
சில நேரங்களில்
என்னையே
கசக்கி போடுகிறாயடி கள்ளி..!
நீ
கசக்குவதால் எனக்கும்
பிடித்து போகிறது
கசிந்து போவது...!

நீ சொல்வதெல்லாம்
சரி,
நான் சொல்வதெல்லாம்
தவறு,
எனக்கோ
நீ
எதை செய்தாலும்
சரிதான்,
எதை சொன்னாலும்
சரிதான்,
என்னை
நீ,
தூக்கி எறிந்ததும்
அப்படித்தானடி...!

என்னை கட்டி அனைத்திடு,
முத்தமிடு,
வசை பாடு,
தழுவிடு,
சண்டையிடு,
என்னை தூக்கி
எரிந்துவிட்டும் போ..!
அதற்க்கும் சரி என்கிறேன்,
ஆனால்,
என்னைப்போல்
உன்னை
காதலிக்கும்
ஒருவனை காட்டு...!!!
சவால்விடுகிறேன்...!!!

நமக்குள் இருப்பது
காதல் மட்டும் அல்ல,
ஒவ்வொரு நொடியும்
கருத்தரிக்கும்
தன்னிகரில்லா
தாய்மை...!

புரிந்து கொள்ளடி கள்ளி...!!!

                                - இளைய பாரதி