Sunday, 29 January 2012


அண்ணன் முத்துகுமரனுக்கு
என் உயிர் வணக்கம்...!!!

உறங்கிக்கிடந்த
எங்கள்
உயிர் எழுப்பிவிட
உயிர் விட்டவன்
நீ,

தண்ணீர் தெளித்து,
எழுப்பாமல்
எங்களை,
நெருப்பு தெளித்து,
அல்லவா
எழுப்பினாய்,
நீ,

தன் உயிரை
மாய்த்துக்கொள்பவர்களை
கோழை
என்று கருதும்
இந்த உலகில்
உன் உயிரை
மாய்த்துக்கொண்டு
வீரனானவன்
நீ,

விதை
விழுந்தால்
விருட்சமாகும்,
விருட்சமே
விழுந்தது
உன் வடிவில்...!

வீர வணக்கம்
வீர வணக்கம்
என்று
பத்தோடு பதினொன்றாய்,
கோழை கோஷமிட
நான் விரும்பவில்லை,

வீரனே
உனக்கு
என்
உயிர் வணக்கம்...!!!

என்
உயிர் வணக்கம்...!!!


                               - இளையபாரதிFriday, 27 January 2012

...." பசி "" பசி "" பசி "....


" பசி "..." பசி "..." பசி "...
என் பசி
யாரென்று தெரியுமா...?
உங்களுக்கு...?
பசி என்,
" அழையா விருந்தாளி "...

சாதி,மதம்,இனம்,சமயம்
பார்க்காத
சமத்துவ விருந்தாளிதான்,

ஆனால்,
இவன்
என் வீட்டில்
மட்டுமே
இலைப்பார
ஆசைப்படுகிறான்,
இவனுக்கு
நான் என்ன
விருந்து படைக்க..?

ஒட்டு துணியில்
மானம் காக்கும்
என்னைபோன்றோர்..
ஒட்டு மொத்தமாய்
வயிறு
நிறைந்ததே இல்லை...!


எங்கள் வீட்டு
கதவை மட்டும் தட்டும்
இந்த விருந்தாளி,
கல்லாய் கிடக்கும்
கடவுள்களை
சீண்டி கூட பார்க்காதோ..?

சாமிக்கு படைத்துவிட்டு
நீங்கள் வாங்கும்
ஒரு
உருண்டை பிரசாதத்தில்
சிறு உருண்டை
கொடுத்து இருந்தாலும்
பசி போக்கி இருப்பேனோ..?
அப்போது " பசியாற்றுதல் "
என்றால் என்ன என்று
என்னால்
சுவைத்து இருக்க முடியுமோ...?

நீங்கள் உணவுகளை
உண்டு பசியாற்றுகிறீர்கள்,
நான் பசியை
உண்டு பசியாற்றுகிறேன்,

நீங்கள் உண்டு
போட்ட உணவு காகிதங்களில்
இருந்த உணவை உண்டே
இத்தனை நாட்கள்
உயிர் வாழ்ந்து இருக்கிறேனே...!
உங்கள் உணவை
எனக்கு பகிர்ந்து இருந்தால்...
நினைத்தாலே
நெஞ்சமெல்லாம்
மகிழ்ச்சியில்..பசியாருகிறது...!!!

நீங்கள் என்னைபோலே,
பசியை ருசித்து
இருக்க வாய்ப்பில்லை...
ம்ம்ம்ம்... நீங்கள்
என்னைபோலே
தாய் இல்லாதவனா
என்ன..?
என் தாய் மட்டும்
இருந்தால்
என் வாழ்வில் பசி என்பதேது..???

ஒரே முறை
ஒரே ஒரு முறை
பசியை ருசித்து பாருங்கள்,
அப்போது
எங்கள் அன்றாட
உணவான
பசியின்
கொடிய  ருசி
உங்களுக்கு
தெரியக்கூடும்...!!!
                         
                           - இளையபாரதி

Monday, 23 January 2012


உனக்கு,
ஆயிரம் முறை
சொன்னேன்
"உதட்டுச்சாயம்
பூசாதே",என்று
"போ",
சென்று
பதில் கூறு..!
யாரோ...
புகார் கொடுத்து
இருக்கிறார்களாம்
"வானவில்லின்
ஒரு வண்ணம்
காணவில்லை", என்று.

                           - இளையபாரதி

Saturday, 21 January 2012

யார் காரணம் ..!


யார் காரணம்
என் இந்த
நிலைக்கு..?

எந்த கவலையும்  இல்லாமல்,
தன்,
காமக்கழிவை
என் தாய் மீது
புலம் பெயர்த்த 
அந்த
யாரோ ஒரு ஆணா..?

விந்தில்
உயிர் ஜனிக்கும்
என்று தெரிந்தும்,
தன் வயிற்று பசியை
போக்கிக்கொள்ளும்
சாக்கில் தன்
காமபசியையும்
போக்கிக்கொண்ட
என் தாயா..?

நீங்கள் யாரும்
என்னைப்பற்றி
கவலைப்பட போவதில்லை..,!

எங்கோ இருக்கும்
தெய்வத்திற்கு,
உங்கள் வீட்டில்
உண்டியல் சேர்த்து,
பல நாட்கள்
வரிசையில் நின்று
தெய்வ தரிசனம்
பார்த்து,
உண்டியல்
காணிக்கை செலுத்தும்
நீங்கள்
தினமும்
சாலையோரம்
நான்,
பசித்து கிடப்பதை
பார்க்காமல்
போவது எப்படி..?

நான் என்ன செய்தேன்..?

நான் பிறப்பு வரம் கேட்கவில்லையே..?
வலுக்கட்டாயமாய்
எனக்கு பிறப்பு
கொடுத்தது யார்..?

அம்மா என்கிறார்கள்,
அப்பா என்கிறார்கள்,
குழந்தைகள்,
எனக்கு...?

அழுக்காய் இருப்பதால்
அருகில் அனுமதிக்காத
மக்களே..!
எத்தனை பேர்
என்னை
குளிப்பாட்ட நினைத்தீர்கள்..?

எனக்கு பரிதாபம்,
பார்க்கும் உங்களில்
எத்தனை பேர்
என்னை
படிக்க வைக்க எண்ணினீர்கள்..?

குப்பைகளாக
பார்க்க படுவதினால்
குப்பையே
தெய்வமாகி
போனது எனக்கு,

என் கேள்விகளுக்கு
எந்த
பகவான் பதில் கூறுவார்..?
எந்த
பகுத்தறிவாளி
பதில் கூறுவார்..?

என்னை
குப்பையாய்
பார்க்கும் மக்களே..!
என்னை வாழ
வைப்பவர்கள்  நீங்கள்
நீங்கள் வாழவேண்டும்,

நீங்கள் குப்பை
போட்டால்தான்,
என் குப்பை
வயிறு நிறையும்...!

உணவு வேண்டாம்
காகிதங்களை
குப்பையில் போடுங்கள்..,
நானும்
"உழைத்து உண்ணவே விரும்புகிறேன்"...!

நான் வெளியே
அழுக்காய்
இருந்தாலும்
உள்ளே சுத்தமாய்
இருக்கிறேன்...!

" நீங்கள் "....???
                              - பிரகாஷ் பாரதி

Friday, 20 January 2012

என்,
தமிழ் மொழியுடன்,
நான்,
சண்டையிடும்
ஒரே
தருணம்
உன்னை பற்றி,
கவிதை எழுத
நினைத்திடும்போது..!
தமிழ்,
யாருக்கும்
எளிதில்
கொடுத்து விடுவதில்லை
சிறப்பான
வார்த்தைகளை...!!!
                             - பிரகாஷ் பாரதி

Wednesday, 18 January 2012

நான்,
உன்னை 
முத்தமிடுகையில்,
உன் வெட்கமும் 
கற்பூரம் போலத்தான்,
சட்டென்று 
பற்றிக்கொள்ளும்,
எரிந்து
முடிந்துபிறகு
தடயம் இல்லாமல்
காணாமல்போகும்,
எதுவுமே
நடக்காதது போல்
நீ,
நடிப்பது மாதிரி...!!!
               - பிரகாஷ் பாரதி


தவம்,
இருந்துதானே,
வரம்,
வாங்குவார்கள்...!
வரம் 
கிடித்த பின்னே 
ஏன் தவமிருக்கிறது
நீ
இட்ட கோலம் 
உன் வீட்டு 
வாசலில்...?
                      - பிரகாஷ் பாரதி 

Sunday, 15 January 2012

நன்றி...!!! உழவா...!!!


உச்சியில் விழி வைத்து
வானத்தை பார்க்கும்,
தமிழ் உழவன்,

அறுவடை செய்தததை
அள்ளி கொடுத்து
மிச்சம் இருப்பதை
மகிழ்ச்சியாய் உண்டு,

பசியை மட்டுமே
ருசித்து பார்க்கும்,
எம் உழவன்,

உலகிற்கே பசி போக்கும்
எம் உழவன்,

நம் சதை
வளர்க்கிறோம்
அவன் உணவு உண்டு,

அவன் சதை
இழக்கிறான்
நமக்கு உணவு கொடுத்து,

இந்த திருநாள்
மட்டும்தான்...!

உணவு அழித்தவனுக்கு
நன்றி கூறி
நாம் நன்றியாய்
இருப்பது
இந்த நாளில்
மட்டும் தான்...

ஊர் கேட்க
உரக்க சொல்வோம்
" பொங்கலோ பொங்கல் " என்று

நம் உழவனின்
சந்தோஷமும்,
எப்போதும்
பொங்காத
அவன்
வயிறும்
பொங்கட்டுமே...!

உழவா
 நான்,
உரக்க சொல்வேன்
நீ இட்ட....
உணவிற்கு நன்றி...!!!
                  - பிரகாஷ் பாரதிWednesday, 11 January 2012


உனக்காகவே
துடித்துக்கொண்டு
உனக்காகவே
இயங்கிக்கொண்டு இருக்கும்
என்
இதயம்
நீ
இல்லாத
நேரங்களில் மட்டுமே
எனக்காக
அழுகிறது...!
                - பிரகாஷ் பாரதி

Tuesday, 10 January 2012

அங்கீகரிக்க படாத கவிதைகள்....!

அங்கீகரிக்க படாத
கவிதைகளாகி போகின்றன,
உன்னைப்பற்றி
எழுதாத
எனது சில
கவிதைகள்....!

                  - பிரகாஷ் பாரதி

Saturday, 7 January 2012

தோழியே..!

தோழியே..!

கலக்கம் எதற்கு..?

கை கோர்த்து நடக்க
உனக்கு நட்புக்கள் 
இருக்கையிலே..!

துக்கமும்...
துயரமும்...
உன் விழி மறைத்தால்..,
கண்ணீர் துடைத்து
உன் தலை
சாய்க்க
உன் " அப்பா " தோள்கள்
இருக்கையிலே..?

நித்தமும்
நித்திரை
தொலைத்து..,
நிலவு காட்டி
உனக்கு நித்திரை 
வழங்க 
உன் தாய்
இருக்கையிலே..!

பாரதியின்
பாடல் கேட்டு
வளர்ந்தவள் அல்லவா
நீ..!

இன்று நீ
மண் புழுவாய்
நெளிவது எதற்கு..?

எதை இழந்தாய்..?

எப்படி இழந்தாய்..?

ஒரு கணம் யோசி..,
உன் மனம்
சொல்வதை கேள்..,

நடை போடு,
வழியில்....!
வெறிகொண்ட
நாய்களையும்
பேய்களையும்
நசுக்கி விட்டு போ...!

ஒரு பாதை தெளிவானது,

ஒரு பாதை குழப்பமானது,

குழம்பினால் மட்டுமே
தெளிவாக முடியும்,
ஆனால்
குழப்பம் மட்டுமே இருந்தால்
தெளிவு
பிறக்க வழி ஏது...?

தைரியமான
பாதையில்
தளராது
நடந்து போ..!

தடுக்க ஆள் இல்லை..

உன்னை ஒடுக்கவும்
ஆள் இல்லை ..!

தெளிவான நடை பயில்...!
       
                           - பிரகாஷ் பாரதி

 

Friday, 6 January 2012

காதல்...விஷம்!

அவனுக்கோ..?
அவளுக்கோ..?
அவனை பற்றியோ..!
அவளை பற்றியோ..!
புரியாத வரையில்தான்..,

ஊடல் விளையாடுகிறது..,
காதல் தாண்டவமாடுகிறது...,
முத்தம் பேசுகிறது..,

அவனையோ
அல்லது
அவளையோ
அவனோ..?
இல்லை
அவளோ..?
யாரேனும் ஒருவர்
புரிந்து கொண்டால்..,

காணாமல்
போய் விடுகிறது
இந்த
பாழாய்ப்போன
காதல்,

காதல் இல்லாத
இடத்தில்
ஊடலுக்கு என்ன வேலை,

ஊடல் இல்லாத
இடத்தில்
முத்தத்திற்கு என்ன வேலை...?

" பிரிவு " காதலில்
பலர்
பெற்ற பரிசு
ஆனால்
இதுவரை
காதலித்த யாரும்
காதலை
பரிசாக
வென்றதில்லை,

காதலில்
தோற்றவனை தவிர...!

உயிரை
பெற்றெடுக்கும்
தாய் மாதிரிதான்
உணர்வை
பெற்றெடுப்பது
" காதல் "...!

" காதல் " சொல்லி அடங்காத
ஒரு உணர்வு...,

அனாலும் கூட,
நாம்
ருசிக்காமலே
மரணம் வழங்கும்
" விஷம் " காதல்...!

                        - பிரகாஷ் பாரதி

 

Tuesday, 3 January 2012

என்னவென்று நினைத்தாய் தமிழனை..???என்னவென்று நினைத்தாய் தமிழனை..???

கொளுத்தி போட்ட
" தீ " குச்சி என்று
நினைத்தாயோ...?
தமிழன் எரிமலையாட...!

வெடித்து சிதறினால்
உன் பல  தலைமுறை
தாங்காது..!

அடுத்து
நீ
வைக்க போகும்
அடுத்த அடியை
யோசித்து வை,
என்
தமிழகத்தில் இருப்பது
மண் அல்ல
தீ பிழம்பு,

திராவிட மாநிலங்கள்
நான்கு இருந்தும்
திராவிடம்
போற்றும் ஒரே
மண் என்
தமிழ் மண்ணடா,

பசி என்று வா
இலை போடுவோம்..!
தமிழனை
ருசி பார்க்க
எண்ணி வந்தால்..,
எங்கள் உலையில்
நீ கொதிப்பாய்
ஜாக்கிரதை...!

அமைதி காத்தே
 பல லட்சம்
சொந்தங்கள்
இழந்துவிட்டோம்
பீரங்கி பசிக்கும்,
துப்பாக்கி பசிக்கும்,
பலி கொடுத்தோம்,..!

முத்துகுமரனும்,
செங்கொடியும்,
நாராயணனும்...,
எங்கள் உயிரில்
கலந்து போனவர்கள்,
காலம் சென்றவர்கள் அல்ல...!

ஒதுங்கிப் போனால்
ஓங்கி அடிப்பாயோ..!
எதிர்த்து நின்றால்
ஏன் ஓடி
ஒளிகிறாய்...???

பிழைக்க வா
தமிழகத்திற்கு
பிழைக்க வைப்போம்,
பிழைத்துக்கொள்,
பின்னால்
அடித்தால்..?
பிடரி சிலிர்ப்போம்
பீதியில்
நீ
மடிவது சத்தியம்...,

அன்பாய் இருந்தால்
தமிழன் உனக்கு அடிமை,
என்பதை இன்றோடு
மறந்து விடு,
அன்பிற்கு அடிமையாகி தான்
இன்று
அரை வேக்காடுகளும்
அடிக்க வருகின்றன,

அன்பானாலும் சரி
அடியானாலும் சரி
நீ கொடுப்பதே
உனக்கு
திரும்ப கிடைக்கும்
எதை கொடுப்பது என்று
உன் அரசுடன்
கலந்து பேசி

படைகளத்துக்கு
படையோடு வா,
நாங்கள்
ஒரே ஒரு
" தமிழனை "
அனுப்பி வைக்கிறோம்
முடிந்தால்
மோது......!!!

என்னவென்று நினைத்தாய் தமிழனை..???

            - பிரகாஷ் பாரதி

Sunday, 1 January 2012

என்னவள்  முதல் முறை
 சேலை கட்டி என் முன்னே
வந்து நின்ற பொது நான் அவளை
பார்த்த முதல் நொடி எனக்கு
தோன்றிய கவிதை இது...!


" பெண்களே
தற்கொலை
செய்து கொள்ளுங்கள்,
என்னவள்
சேலை கட்டி
வருகிறாள் "

                       - பிரகாஷ் பாரதி