Saturday, 31 December 2011

சென்று வா சென்ற ஆண்டே...!

சென்று வா சென்ற ஆண்டே...!

கடந்த ஆண்டு
உன்னிடம் கேட்டதைதான்
இந்த முறையும் கேட்கிறேன்,

கொஞ்சம் சந்தோஷம்,
நிறைய நிம்மதி
கொண்டு வா...!

ஒவ்வொரு முறை
உன் பிறந்த நாளுக்கு
சபதம் ஏற்க வேண்டும்
என்பதைதான் 
சபதமாக கொண்டிருக்கிறேன்,

இதுவரை  ஏற்ற
சபதத்தை சட்டை செய்வதே இல்லை,

அப்படி என்ன
நீ,
புதியதாய்
பிறக்க போகிறாய்,
உன் பெயரை
மட்டும் மாற்றிக்கொண்டு
மீண்டும் நீதானே
வந்து தொலைக்க போகிறாய்...!

செல்லும் நேரத்தில்
புயலை கிளப்பி,
எங்கள் உயிரை
உன் பையில்
போட்டு செல்லும்
உன் பிறந்த நாளுக்கு 
நான் ஏன்
பிறருக்கு வாழ்த்துக்கள்
சொல்ல வேண்டும்..?

இருந்தாலும் கூட 
நீ ஒரு,
"சமத்துவமான விழா"

மனிதர்கள்
ஜாதி,மதம்,மொழி

அனைத்தையும் கடந்து
கட்டித்தழுவுவது
உன் பிறந்த நாளுக்கு மட்டும் தான்...!

உலகமே
கொண்டாடும் 
ஒரு
"சமத்துவ விழா"
உன் பிறந்த நாள் மட்டும் தான்,

ஒரு நாள்
உலக மக்களை
மனிதர்களாய்
மாற்றும்
உன் சக்திக்கு,
தலை வணங்குகிறேன்...!

இப்போது சொல்கிறேன்
உனக்கு " பிறந்த நாள் வாழுத்துக்கள் "....

"சுனாமியையும்", "தானே" வையும்
எங்களுக்கு
தந்திடாமல்,
தனித்தன்மையாய்,
இருந்து விட்டு போ..!

தாழ்மையுடன்
கேட்கிறோம்...!

சென்று வா சென்ற ஆண்டே...!

கொஞ்சம் சந்தோஷம்,
நிறைய நிம்மதி
கொண்டு வா...!

            - பிரகாஷ் பாரதி

Friday, 30 December 2011


நிச்சயமாக
சொல்கிறேன்,

உன்,
தந்தை,
ஓவியம் கொண்டு
கவிதை,
எழுதுபவராகதான்
இருந்திருக்க வேண்டும்...!

இல்லையேல்,
கவிதை கொண்டு
சிலை வடிப்பவராக
இருந்திருக்க வேண்டும்...

                     - பிரகாஷ் பாரதி

Monday, 26 December 2011

மேகம் கருத்தால்தான்,
மயில் தோகை
விரித்து நடனமாடும்,

மயிலிறகு,
கூந்தல் கொண்டவளே...!

உன்,
கூந்தலே...
மேகமாய்
இருப்பதால்தான்,

உன்,
இடை
எப்போதும்
நடனமாடிக்கொண்டே
இருக்கிறதோ...?

                     - பிரகாஷ் பாரதி

Saturday, 24 December 2011


உன்னை எடுத்து,
வெளியே போட்டுவிடலாம்,
என்று நினைத்து,
என்,
இதயத்தை
குடைந்தால்,
ஆழமாக
போய் கொண்டேதான்
இருக்கிறது,
நீ,
எவ்வளவு
ஆழத்தில்தான்
இருக்கிறாய்
என் இதயத்தில்..??
                     - பிரகாஷ் பாரதி

Thursday, 22 December 2011

அடியே..!...கோபப்படாதே...!

அடியே..!
கோபப்படாதே...,
நீ,
கோபப்படுகையில்
உன்,
நெற்றி சுருங்குகையில்,
குங்குமம்,
உதிர்ந்து,
கீழே
விழுவதை
என்னால்
பிடிக்க முடியவில்லை,
"தெய்வத்தின் கழுத்தில்
சூடிய மாலை
மண்ணில் விழக்கூடாது"
என்றபோது,
குங்குமத்தை
மட்டும்
எப்படி
அனுமதிப்பது...?
அதனால்தான்
சொல்கிறேன்
அடியே...!
கோபப்படாதே...!
                     - பிரகாஷ் பாரதி

Tuesday, 20 December 2011

என்,
மருத்துவரும்
அசந்துதான்
போனார்,
என்,
இதயம்
இதய
வடிவில்
இல்லாமல்
உன்,
வடிவில்
இருந்ததனால்....!
            - பிரகாஷ் பாரதி

எத்தனை சண்டை...?

எத்தனை சண்டை...?
 அவள் விரல்களுக்கும்
எனக்கும்..!
நான் அவள்
நெற்றியின் மேல்
 இருக்கும் முடியாக
இருக்கும்  பொது..!
நான்,
ஒவ்வொரு முறை
அவள்  கன்னங்களை
முத்தமிட விழும்போதெல்லாம்,
தன் விரல்கொண்டு
தடுத்து விடுகிறாள்...!
                           - பிரகாஷ் பாரதி

Friday, 16 December 2011

! காதல்...காதல்....காதல் !


! காதல்...காதல்....காதல் !


மனிதனாய்
இருப்பவனை
பித்தனாக்கும்,
பித்து பிடித்த
ஒரு நல்ல  பேய்..!


நல்ல இதயத்தில்
கீரல்களையும்,
கீரிகிடக்கும்,
இதயங்களில்,
மருந்திடும்
மாய மருத்துவம்,


அனைவருக்கும்
பிடித்த,
அனைவரும்
சுவைக்க விரும்பும்,
பாதி உயிரை,
மட்டுமே கொல்லும்
ஒரு
இனிப்பான விஷம்,


பெற்றோரை
சில நொடிகள்,
எதிரியாக
பார்க்க வைக்கும்,
இதய சர்வாதிகாரி,


அவனுக்கே  தெரியாமலும்,
அவளுக்கே  தெரியாமலும்,
இருவரும்
கையொப்பம் இட்டுக்கொள்ளும்
அடிமை சாசனம்,


விழி அசைவிற்கு
ஒரு மொழி,

கூந்தல் அசைவிற்கு
ஒரு மொழி,

புன்னகைக்கு
ஒரு மொழி,

என பல
மொழிகளை
கற்க வைக்கும் காதல்,

அவனோ? அவளோ?
எதை செய்தாலும்,
ரசிக்க வைக்கும்...!
ஆனாலும் மெல்லியதொரு
கோபத்தையும்
உள்ளடக்கும் காதல்!

சேர்ந்திருந்தால்
சொர்க்கம்,

பிரிந்திருந்தால்
நரகம்,

சில நேரங்களில்
சேர்ந்தே  இருந்தாலும்
நரங்கம் தான்,

ஊடல் கொள்ளும்
வேளைகளில்,
யார் முதலில்
பேசுவது?

என்ற திமிரையும் தாண்டி,
இருவரில்
ஒருவர் முன் வந்து
பேசிவிட்டால்,
மற்றொருவர்

" மன்னித்துவிடு "

என்று உளமார
அகங்காரம் விட்டு
கட்டி தழுவும் நொடி...,
ஆஹா...

காதலுக்கு நிகர் காதல் தான்....!
                              
                                         - இளையபாரதிதெரியுமா உனக்கு...?உன்னை,
நான்,
நிலவோடு
ஒப்பிடாததற்கு
காரணம் தெரியுமா
உனக்கு...?
சொல்கிறேன் கேள்,
நிலவு
தேய்ந்து கொண்டே இருந்து
ஒரு நாள்
காணாமல்
போவதால் தான்,
ஆனாலும்
உன்னை,
பௌர்ணமியாக
நான்,
பார்த்திருந்தும்
திடீரென,
நீ
காணமல் தான் போனாய்...!
                            - பிரகாஷ் பாரதி

Thursday, 15 December 2011

யார் சொல்வார்கள்???

" பூ " வை
கீழ போடாதீங்க..!

ஐயோ,
அந்த " பூ " வை
ஏன் மிதிகிறீங்க..?

அம்மா..! திட்டுவாங்க...

அம்மா..! இங்க பாரும்மா..
" பூ " வை மிதிக்கிறாங்க..!

என்று உறங்கும்
தன் அம்மா வை
எழுப்பும்
அந்த
பிஞ்சு சிறுமியிடம்
யார் சொல்வார்கள்,
அது அவள்
அம்மாவின்
இறுதி ஊர்வலம் என்று...?
                       - பிரகாஷ் பாரதி

தனி ஒரு உலகம் வேண்டும்..!

தனி ஒரு உலகம் வேண்டும்..!

தான் கொண்ட
காதலை முதலில்
தோழனிடம் சொல்லாமல்,
தந்தையிடம்
பகிர்ந்து கொள்ளும்
சுதந்திரம் உள்ள உலகம்,

செயற்கை துளியும்
இல்லாமல்,
முற்றிலும்
இயற்கையாய்
ஒரு உலகம்,

அடை மழையில்
ஆடை இல்லாமல்
நான் ஆட்டம் போட்டாலும்
ஆபாசம் இல்லாமல்
என்னோடு விளையாடும்
ஒரு உன்னத உலகம்,

கதவுகள் இல்லாத
வீடுகளை கொண்ட
ஒரு உலகம்,

கண்ணீர் அறியாத
ஒரு உலகம்,

தண்ணீர் சண்டை
இல்லாத
ஒரு உலகம்,

விழிகள் பேசும்
மொழி கொண்ட
ஒரு உலகம்,

கவிதைகள் தேசிய
மொழியான
ஒரு உலகம்,

மதங்களை
மண்ணோடு
புதைத்து
மனிதம்
பேசும்
மகத்தான
ஒரு உலகம்,

கடிகாரம்
இல்லாத
ஒரு உலகம்,

வாக்கு தவறிய
மந்திரியை
மண்டியிட வைத்து
குட்டிப்பார்க்கும்
உரிமையான்
ஒரு உலகம்,

இப்போது இதுவரை
போதும்,
இந்த உலகம்
முதலில் கிடைக்கட்டும்
அடுத்த உலகத்தை
பிறகு யோசிப்போம்...!
          
          - பிரகாஷ் பாரதி

Wednesday, 14 December 2011

" தீர்த்தம் "

கோவிலில்
பூசாரியிடம்
வாங்கி
குடிப்பதற்கு
பெயர்
" தீர்த்தம் " என்றால்..?
அதை வாங்கி
குடித்துவிட்டு
நீ,
உன் விரல்கள்
உதறிய போது
சிந்திய
அந்த
இரு
துளிகளை
என்னவென்று சொல்ல...?
                      

                      - பிரகாஷ் பாரதி

வல்லரசு..??

ஏய் அமெரிக்காவே!
அலட்டிக்கொள்ளாதே,
நீ மட்டுமா
வல்லரசு..??
என் இந்தியாவும்தான்
வல்லரசு..!
ஊழலில்....!
                - பிரகாஷ் பாரதி

அரசியல்வாதி !


அரசியல்வாதி!


அரசியல்வாதி!
இந்த சொல் 
கேட்டாலே பீதி,


யார் இவன்?
எங்கிருந்து வந்தான்?
எப்படி முளைத்தான்?
இவன் கொள்கை என்ன?
இவன் எப்படிபட்டவன்?
இவன் நீதி என்ன?
இவன் பெயர் தான் என்ன? 


யார் இவன்?
இவனும் மனிதன் தான்,
இவனுக்கு என்று 
ஒரு இதயமும்,
அதற்குள் 
மனசாட்சியும் இருந்த வரை,....


எங்கிருந்து வந்தான்?
நம்மை போல 
கருவறை தான் 
இவன் பிறப்பிடம்,
இவன் வளர்ப்பிடம் 
கழிவறையாக 
இருந்திருக்கலாம்,
இன்னமும் அழுக்காகத்தான் 
இருக்கிறான்,
உள்ளத்திலும், உடலிலும்,....


எப்படி முளைத்தான்?
நாம் விதைத்த 
விதையில் 
முளைதவன்தான்,
நாம் ஊற்றிய 
தண்ணீரில் வளர்ந்தவன் தான்,
ஆனால் 
நாம் இவனை 
விதைத்தது 
மண்ணில்,
இவனோ மண்ணில் 
வளராமல்,
பொன்னில் வளர நினைக்கிறான்,
சில நேரங்களில் பெண்ணிலும்,.............


இவன் கொள்கை என்ன?
கொள்கை என்றால் என்ன?...
என்று கேட்க்கும் 
நிலையில் தான் 
இவன் கொள்கை,
அதுவே இவன் 
கொள்கை, 
நிலைமை இப்படி இருக்க,
கொள்கை பரப்பிற்கு 
தனியாக ஆட்கள்,.....


இவன் எப்படிபட்டவன்?
இவன் நாலும் தெரிந்தவன்,
பொய், சூது, லஞ்சம், நம்பிக்கை துரோகம்...
இந்த நான்கு 
வேதங்களிலும், 
தேர்ச்சி பெற்றவன்,
தேர்தல் நேரத்தில் மட்டும் 
பிச்சைக்காரன்,
கை ஏந்தி அல்ல 
கை கூப்பி,...


இவன் நீதி என்ன?
நீதிமன்றத்தை 
அவமதிப்பதே 
இவன் நீதி,...........


இவன் பெயர் தான் என்ன? 
எந்த பெயரை  சொல்ல?


தேர்தல் நேரத்தில் பிச்சைக்காரன்,
தேர்தல் வாக்குறுதி 
அளிப்பதில் பொய்க்காரன்,
வெற்றி பெற்றபின் 
நன்றி மறந்தவன்,
ஆட்சி செய்கையில் 
நம்பிக்கை துரோகி,.....
சொல்லிக்கொண்டே போகலாம்......................


'ரன்'  'ரன்' என்று 
குறிப்பிடுவதால் ஆண்களை 
மட்டும் குறிப்பிடுவன அல்ல,
எந்த பாலினம் 
ஆனாலும் 
அரசியல்வாதி அரசியல்வாதிதானே!


நான் கூறி இருப்பது 
நல்ல அரசியல்வாதிகளை அல்ல.....!!!
எது எப்படி இருந்தால் 
நமக்கு என்ன?
நமக்கு 
கிரிக்கெட்டில் 
இந்திய வெற்றி பெற்றால் 
அது தானே
நம் தேச பக்தி...?


                  - பிரகாஷ் பாரதி 

Tuesday, 13 December 2011

நீயே வந்திருப்பது எதற்கு?.........

அனைவரும்,
கடற்கரைக்கு
வந்து செல்கிறார்கள்,
தென்றல் வாங்குவதற்கு,
ஆனால்
தென்றலே!
நீயே!
வந்திருப்பது எதற்கு?
                  
                      - பிரகாஷ் பாரதி

நீ என்னை 
தள்ளி வைத்திருக்கிறாய்,
நானோ உன்னை 
அள்ளி வைத்திருக்கிறேன்,
என் இதயத்தில்...!
                 
                      - பிரகாஷ் பாரதி 

Monday, 12 December 2011

நான், 
உன் கண்களை 
பார்த்து 
ரசித்துக் கொண்டிருந்தேன்,
நீ,
வெட்கத்தில்,
உன் கைகளால்,
உன் கண்களை
மூடினாய்,
அடி பைத்தியக்காரி,
உன் கண்கள்
திறந்திருந்தால்,
நான்
உன் கண்களை
மட்டும் தானே
ரசித்திருப்பேன்...!!!
                

                 - பிரகாஷ் பாரதி
உலக மகா 
கடத்தல்காரி நீ !
என்னை,
கடந்து சென்ற 
ஒரு நொடியில் 
எப்படி
என்னை,
கடத்திசென்றாய்.....??
                    

                  -  பிரகாஷ் பாரதி


உன் உள்ளங்கையில் 
கசிந்துகொண்டிருக்கும் 
வியர்வை துளிகளை
கொஞ்சம் கொடு,
என் 
இதயத்தில்
பற்றி எரிந்து கொண்டிருக்கும்
காதலை,
சற்று
குளிரூடிக்கொள்கிறேன்....!
                

                  - பிரகாஷ் பாரதி
உலகில் 
' பிரசவ ' வலிதான்
கொடிய வலி 
என்கிறார்களே !
நீ, என்னை 
விட்டுச்
சென்ற பிறகு
நான் ' சவம் ' ஆன
வலி?
எத்தகைய வலி.....?
            - பிரகாஷ் பாரதி

பாரதி! பாரதி!! பாரதி!!!


பசி தாங்க மாட்டான்
என் தலைவன்,
அவன் பசி அல்ல
சிட்டுக்குருவியின் பசி,

ரௌத்திரம் பேசியவன்,
காதலை சுவாசித்தவன்,

சாட்டை எடுக்காமல்,
கவிதையால் அடித்தவன்,

நம் நரம்பு
முறுக்கேற வைக்கும்
நளினம் தெரிந்தவன்,

குருதி வழியும்
கண்கள் கொண்டவன்,

தன் வீட்டில்
மேசை இல்லாதவன்
ஆனால் இன்று
எல்லா வீட்டு
மேசைகளையும்
அலகரிப்பவன்,

பயம் அற்றவன்,
படை நடுங்க செய்தவன்,

காலனை சபித்தவன்,
காதலை சுவைத்தவன்,
காதலாய் ஆனவன்,

இன்று
கவிஞர்களுக்கு ஆதவன்,

பற்றி எரியும்
பக்தி கொண்டான்,
தடம் மாறா
பாதை கொண்டான்,

சினம் கொண்ட
காதலன் அவன்,
அவன் சினத்தையும்
காதலிக்க செய்தான்,

மகாகவியே,
எங்கு இருக்கிறாய்?
மீண்டும் வா!

உன்னால் மட்டுமே
செய்ய முடிந்த
பல வேலைகள்
மீதம் உள்ளன,

படையாய்,
இளைஞர்கள்
வருகிறோம்,
உனக்கு குடையாய்,
கொடுப்பாய் உந்தன்
பண்புகளை,கொள்கைகளை
எங்களுக்கு கொடையாய்...!
- பிரகாஷ் பாரதி

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் தும்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நானும்
வீழ்வே னென்று நினைத்தாயோ !!!
- மகாகவி பாரதியார்
உன் அழகால்,
என்னை,
அணு அணுவாய்,
கொள்வது 
போதாதா உனக்கு?
சட்டென்று
நான்,
உயிரை விடத்தான்
இந்த கும்மிருட்டில்,
அந்த தீப
ஒளியில்,
உன் அழகு
முகத்தை
எனக்கு காட்டுகிறாயா....??
- பிரகாஷ் பாரதி
எரிந்துகொண்டே,
சிரித்துகொண்டு,
இறந்துகொண்டு,
இருந்த 
' தீ ' குச்சியை 
பார்த்து கேட்டேன்
இறக்கும் பொழுதும்
எப்படி சிரிக்கிறாய்? என்று,
' தீ ' குச்சி
சிரித்துக்கொண்டே
சொன்னது
"நான் மோட்சம்
அடைந்தேன்" என்று,
எப்படி? எனக்கு
கூறுவாய என்றேன் நான்,
' தீ ' குச்சி,
சொன்னது
என்னை
' தீ ' மூட்டியவள்
உன்னவள் என்று....!
- பிரகாஷ் பாரதி

காதல் கணிதம்!

உன்னை நான், 
முதல் முறை 
சந்தித்தபோது 
எனக்கு இருந்த 
ஏகாந்தம்,
அதற்க்கு இணை ஏது??
கணிதத்தின் மேல்
எனக்கு
தீரா கோபம்,
'ஒன்று' கு மேல்
எண்கள் எதற்கு என்று
'ஒன்று' என்ற
எண் மட்டுமே
கணிதமாக
இருந்திருந்தால்
நாம் சந்திக்கும்
ஒவ்வொரு
சந்திப்பும்
நம் முதல்
சந்திப்பாகவே
இருந்திருக்குமோ...???
- பிரகாஷ் பாரதி
எனக்கு 
எழுதுவது 
பிடிக்காது,
எழுதும் வார்த்தைகளில்,
ஒன்றாவது 
உன் பெயராக
இல்லாமல்
போனால்...!
                - பிரகாஷ் பாரதி
எனக்கு எப்படி 
உன்னை 
காதலிக்க தெரியாதது போல 
நடிக்க தெரியாதோ,
அப்படித்தான் 
உன் விழிகளுக்கும்
என்னை பார்த்துவிட்டு,
பார்க்காததை போல,
நடிக்க தெரியவில்லை...!!!
                    - பிரகாஷ் பாரதி
நீ, 
முதன்முதலாக 
என் பின் இருக்கையில் 
அமர்ந்து 
என்னிடம் 
பேசியபோது,
முதன் முறையாக
என்,
செவிகள்
சுவாசிக்க
ஆரம்பித்தன....!
- பிரகாஷ் பாரதி
இப்படி ஒரு 
குற்றச்சாட்டு
கவிஞன் 
சிரிப்பதில்லை என்று!,
ஒரு பெண்ணிடம்
தன் சிரிப்பை
அடகு வைத்தபிறகுதானே
அவன்
கவிஞன்
ஆகிறான்...!
               - பிரகாஷ் பாரதி

என் தமிழ் தோழா!

என் தமிழ் தோழா!
விடியல் உனக்காகத்தான்,
சுருண்டு கிடக்கும் 
நீ விழித்தெழுவது
எப்போது?
நம் வீதிகளில்
வீரநடை போடுவது
எப்போது?
நம்மை அச்சுறுத்தும்
அயல்நாட்டு அரக்கர்களை
அடக்குவது
எப்போது?
பச்சோந்திகள்,
நிரம்பி வழியும்
நம் அரசியலில்
நீ மனிதனாக
நுழைவது
எப்போது?
என் தமிழ் தோழா
விழித்திரு
அடுத்த விடியலுக்கு
காத்திரு
நீ மட்டும் காத்திருந்தால்,
விடியல்,
உனக்குமட்டுமல்ல
நம் தாய் திருநாட்டிர்க்கும்தான்......!
- பிரகாஷ் பாரதி
சாலையில்,
உன் உயர 
பெண்களை 
நான் 
கடந்து 
செல்லும்போதுதான்
உணர்கிறேன்,
நீ,
உயரத்திலும்
எவ்வளவு
அழகு!!!
- பிரகாஷ் பாரதி
பெண்ணே!
நீயும்,நானும் 
குடைபிடித்து 
மழையில் நனைந்துகொண்டு,
அந்த கடற்கரையில் 
நடந்த பொது,
குடையை
துளைத்து வந்த
ஒரு மழைத்துளி,
உன் இமை மேல்
விழுந்து,
விழி வழி வழிந்தோடி ,
உன் கன்னங்கள்,
தடவி,
கன்னக்குழியில்,
ஜீவ சமாதி
அடைந்தது,
அதை நான்
ரசித்ததை எப்படி
உனக்கு விவரிக்க,
நான்
அடுத்த மழைத்துளிக்கு
காத்திருக்க,
குருடனாகிப் போனேன்,
உன் விழிகள்
என்னை வீழ்த்திக் கொண்டிருந்தன....!

            - பிரகாஷ் பாரதி
தினம் என் 
தலையணை 
கசங்கிப்போவதாய்,
வசை பாடுகிறாள் 
என் அம்மா,
அம்மாவிற்கு
எப்படி
சொல்வேன்?
தினமும்
கனவில் நான்
உன்னோடு
கசந்கிப்போவதை!!!.....

- பிரகாஷ் பாரதி
வீட்டை 
பூட்டிவிட்டு,
திருடனிடம் 
சாவியை கொடுத்து,
பத்திரமாக 
பார்த்துக்கொள் என்று
சொன்னதை போன்ற
கதை ஆனது;
என் இதயத்தை
உன்னிடம்
கொடுத்து வைத்தது,
எங்கு
வைத்து இருக்கிறாய்?
என் இதயத்தை???
- பிரகாஷ் பாரதி
நான் உன் மீது 
வைத்திருக்கும் 
உணர்வை,
காதல் என்ற 
ஒற்றைச் சொல்லில் 
சுருக்கிவிட
முடியவில்லை என்னால்,
இருந்தாலும் கூட,
ஒரு தாய்,
தன் குழந்தை மீது
வைத்திருபதற்கு
பெயர் காதல்
என்றால்,
நான் உன் மீது
வைத்திருப்பதும்
காதலேன்றே
இருந்துவிட்டு
போகட்டும்!!.....
- பிரகாஷ் பாரதி
கட்டி வைத்திருந்த 
என் உயிரை,
கழட்டி விட்ட 
உணர்வு எனக்கு,
அவள் 
தலை முடி
உதிர்ந்து
விழுந்தபோது!!!
- பிரகாஷ் பாரதி
மூடர்களே!
இறுதி ஊர்வலத்தில் 
மலர்கள் 
தூவுவதை 
நிறுத்துங்கள்,
மலரை
பெண்மைக்கு
ஒப்பிட்டுவிட்டு
பிணங்களுக்கு
சூட்டினால்
பெண்மை
பிணமாகிவிடாதோ???
- பிரகாஷ் பாரதி
நான், 
அரை நொடி 
செத்துப்பிழைக்கிறேன்,
என்னவளே!
நீ,
கண்
சிமிட்டாதே!!!
- பிரகாஷ் பாரதி
அவளின், 
மென்மையான 
விரல்களை 
மெதுவாய் 
வருடியபோது 
மென்மையாக
இருந்தது
எனக்கு,
பிறகுதான்
உணர்ந்தேன்
என் காயத்துப்போன
விரல்கள்
வருடினால்
அவளுக்கு,
வலிக்கும் என்று,
வருடுவதை
நிறுத்தினேன் ,
முத்தமிட ஆரம்பித்தேன்!!
- பிரகாஷ் பாரதி
நீ சொன்னதற்காக,
அன்று ரத்தம் 
கொடுத்தேன் 
உன் தோழிக்கு,
உயிர் பெற்றாள்!!
உன் தோழி
சொன்னதர்காகவா?
நீ என்
இதய ரத்தம்
சுவைத்தாய்???
- பிரகாஷ் பாரதி
சூரியன் உதிக்கும் 
திசை எது?
என்று கேட்டார் ஆசிரியர் ,
யோசிக்காமல் சொன்னேன் 
வடக்கு என்று,
அடித்தார் என்னை,
அவருக்கு எப்படி
தெரியும்
உன் வீடு இருப்பது
வடக்கு திசையில் என்று!
- பிரகாஷ் பாரதி
நான் பேனாவில் 
கவிதை எழுதுகிறேன்,
அவளோ தன்
நடையில்,
கவிதை எழுதுகிறாள்....!
- பிரகாஷ் பாரதி
கிளியோபட்ராவை
படைத்துவிட்டு
பிரம்மன் 
கர்வத்தோடு 
திரிந்தானாம்,
பேரழகியை
படைத்து விட்டேன் என்று ,
பிரம்மனை
கூப்பிட்டு
குட்டு வைத்தேன் நான்
உன்னைக் காண்பித்து!!!
                     

                   -பிரகாஷ் பாரதி
இன்னும் இனிக்கிறது!
நீ என் மார்பில் 
உன் கன்னம் வைத்து 
சாய்ந்த பொது,
ஒரு முடி 
குத்தியதற்கு
நான்கு முடிகளுக்கு
நீ மரண தண்டனை
கொடுத்த அந்த
இன்ப வலி!!
-பிரகாஷ் பாரதி
நீ 
என்னை விட்டு சென்ற 
நாள் முதல் 
என்னைச் சுற்றி 
ஈக்கள் மொய்க்கின்றன,
ஈக்களுக்கு
தெரியும் போல
நான் அன்றே
பிணமானது!!!
              - பிரகாஷ் பாரதி

நீ என்னோடு
இல்லாத பகல்கள்
நீளம்,
நீ என்னோடு
இருக்கும் இரவுகள்
நீளும்!
         - பிரகாஷ் பாரதி
தடுக்கி விழுந்தாலும் 
உன் திருமுகம்
எண்ணி சுதாரிப்பேன்! 
இன்று தடுக்கி விட்டது 
நீ என்றால் யாரை 
எண்ணி இருப்பேன்???

- பிரகாஷ் பாரதி
அடி பைத்தியகாரி!!! 
நீ 
வெளி விட்டுப்போன 
சுவாசத்தை 
தேடி தேடி 
சுவாசித்த,
என்னையா
நீ
விட்டு சென்றாய்???? 

        
             - பிரகாஷ் பாரதி
காதலியே உனக்கு 
நன்றி!
நம் காதலுக்கு 
முடிவுரை எழுதிய 
உன் விரல்கள்,
உனக்கே தெரியாமல் 
என் வாழ்க்கைக்கு 
முன்னுரை எழுதிவிட்டன,
காதலியே உனக்கு 
நன்றி!!!

என் வாழ்கை

தோல்வி என்னும் 
ஏணிப்படிகளின்
ஏளன சிரிப்பில் 
தொடர்ந்து கொண்டிருக்கும் 
என் வெற்றிப்பயணம்
என் வாழ்கை.