Friday 27 January 2012

...." பசி "" பசி "" பசி "....


" பசி "..." பசி "..." பசி "...
என் பசி
யாரென்று தெரியுமா...?
உங்களுக்கு...?
பசி என்,
" அழையா விருந்தாளி "...

சாதி,மதம்,இனம்,சமயம்
பார்க்காத
சமத்துவ விருந்தாளிதான்,

ஆனால்,
இவன்
என் வீட்டில்
மட்டுமே
இலைப்பார
ஆசைப்படுகிறான்,
இவனுக்கு
நான் என்ன
விருந்து படைக்க..?

ஒட்டு துணியில்
மானம் காக்கும்
என்னைபோன்றோர்..
ஒட்டு மொத்தமாய்
வயிறு
நிறைந்ததே இல்லை...!


எங்கள் வீட்டு
கதவை மட்டும் தட்டும்
இந்த விருந்தாளி,
கல்லாய் கிடக்கும்
கடவுள்களை
சீண்டி கூட பார்க்காதோ..?

சாமிக்கு படைத்துவிட்டு
நீங்கள் வாங்கும்
ஒரு
உருண்டை பிரசாதத்தில்
சிறு உருண்டை
கொடுத்து இருந்தாலும்
பசி போக்கி இருப்பேனோ..?
அப்போது " பசியாற்றுதல் "
என்றால் என்ன என்று
என்னால்
சுவைத்து இருக்க முடியுமோ...?

நீங்கள் உணவுகளை
உண்டு பசியாற்றுகிறீர்கள்,
நான் பசியை
உண்டு பசியாற்றுகிறேன்,

நீங்கள் உண்டு
போட்ட உணவு காகிதங்களில்
இருந்த உணவை உண்டே
இத்தனை நாட்கள்
உயிர் வாழ்ந்து இருக்கிறேனே...!
உங்கள் உணவை
எனக்கு பகிர்ந்து இருந்தால்...
நினைத்தாலே
நெஞ்சமெல்லாம்
மகிழ்ச்சியில்..பசியாருகிறது...!!!

நீங்கள் என்னைபோலே,
பசியை ருசித்து
இருக்க வாய்ப்பில்லை...
ம்ம்ம்ம்... நீங்கள்
என்னைபோலே
தாய் இல்லாதவனா
என்ன..?
என் தாய் மட்டும்
இருந்தால்
என் வாழ்வில் பசி என்பதேது..???

ஒரே முறை
ஒரே ஒரு முறை
பசியை ருசித்து பாருங்கள்,
அப்போது
எங்கள் அன்றாட
உணவான
பசியின்
கொடிய  ருசி
உங்களுக்கு
தெரியக்கூடும்...!!!
                         
                           - இளையபாரதி













No comments:

Post a Comment