Sunday 15 January 2012

நன்றி...!!! உழவா...!!!


உச்சியில் விழி வைத்து
வானத்தை பார்க்கும்,
தமிழ் உழவன்,

அறுவடை செய்தததை
அள்ளி கொடுத்து
மிச்சம் இருப்பதை
மகிழ்ச்சியாய் உண்டு,

பசியை மட்டுமே
ருசித்து பார்க்கும்,
எம் உழவன்,

உலகிற்கே பசி போக்கும்
எம் உழவன்,

நம் சதை
வளர்க்கிறோம்
அவன் உணவு உண்டு,

அவன் சதை
இழக்கிறான்
நமக்கு உணவு கொடுத்து,

இந்த திருநாள்
மட்டும்தான்...!

உணவு அழித்தவனுக்கு
நன்றி கூறி
நாம் நன்றியாய்
இருப்பது
இந்த நாளில்
மட்டும் தான்...

ஊர் கேட்க
உரக்க சொல்வோம்
" பொங்கலோ பொங்கல் " என்று

நம் உழவனின்
சந்தோஷமும்,
எப்போதும்
பொங்காத
அவன்
வயிறும்
பொங்கட்டுமே...!

உழவா
 நான்,
உரக்க சொல்வேன்
நீ இட்ட....
உணவிற்கு நன்றி...!!!
                  - பிரகாஷ் பாரதி



1 comment:

  1. யாருக்குமில்ல சிந்தனை உனக்குமட்டும் எப்படி நீ உண்மை தமிழன் ஏன் உழவன் ...

    ReplyDelete