Wednesday 14 May 2014

மீட்கப்படாத இரவொன்று..!


மீட்கப்படாத இரவொன்று..!

காதலுக்காய் அர்ப்பணிக்க
முடிவெடுத்த பின்பு,
காமம் சற்று தலை தூக்க
காதல் முகம் மூட

அந்த இரவில்
மின்னல் வந்து போகும்
அந்த அரை நொடி
வெளிச்சத்தில் தெரிந்த
உன் அழகை,

மின்சாரம் பாய்ச்சிய
என் விரல் கொண்டு
தழுவ முற்பட்டபோது

மின்னலின் மகளாய்
காம முகம் விலக்கி,
காதல் முகம் விளக்கி,
மின்னலாகி  மறைந்தாய்...

வாழப்படாமல் இருக்கிறது
அந்த இரவு இன்னும்
வாழ்ந்தாக வேண்டும்
நாம் அந்த இரவை...
மீட்கப்படாமல் இருக்கிறது
அந்த இரவு...

மின்னல் மகளே வா
மீட்டெடுப்போம் வா
மீட்கப்படாத இரவை..!!

                                              - இளையபாரதி

Wednesday 7 May 2014

உமிழ் நிலமா.???



உமிழ் நிலமா.?

உமிழ் நிலமா.?
எம் தமிழகம்..?
உழுதுண்டு வாழ்ந்து,
ஊரார்க்கு வாரிக்கொடுத்த
உழவன் பூமி
எம் தமிழ் பூமி
உமிழ் நிலமா..?

விழி தமிழா..!
வாரிக்கொடுத்து
வாரிக்கொடுத்து நாம்
வாரி பூசிக்கொண்டது போதும்...!

வீரம் விளைந்த
தமிழ் பூமியில்
மற்றவன் மலம் கழிப்பதா..!
வட இந்திய கயவனுக்கு
கழிப்பிடமா தமிழகம்..??

அணு உலை,
மீத்தேன் எரி காற்று,
கொன்று குவிக்கப்பட்ட
ஈழ சொந்தங்கள்,
சுட்டு கொல்லப்பட்ட
தமிழ் மீனவர்கள்,
கச்சத்தீவு,
ஏழ்வர் விடுதலை,
காவிரி நீர் கனவு,
முல்லை பெரியார்,
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர்,
இன்னும் எத்தனை எத்தனை..??

அணு உலை கழிவிற்கு
கழிப்பிடம் தமிழகம்,
எரி காற்று எடுக்க
தமிழகம்,
எச்சில் உமிழவும்
மலம் கழிக்கவும்
நாதியற்றதா தமிழகம்,??

இந்திய வரைபடத்தில்
கீழ் இருப்பதினால்
கழிப்பிடமாக்கப்பட்டதா
நம் தமிழகம்..?

நம் இல்லத்தின் மத்தியில்
நாய்களும் நரிகளும்
மலம் கழிப்பதா..??

விழித்தெழுவோம் தமிழா..!
அல்லது
நம் நடுவீட்டில்
நாமே மலம் கழித்து
மலமோடு மலமாக,
வாழ்ந்தாக வேண்டும்..!

                                      - இளையபாரதி