Wednesday 15 February 2012

விதவையானேன் நான்...!!!


விதவையானேன் நான்...!!!

விதவையானேன் நான்...!!!

தலை பிள்ளையிலிருந்து
கடைசி பிள்ளை வரை
பெண்ணாகிப்போன குடும்பம்
என் குடும்பம்..
உடன் பிறந்தோர்
எண்ணிக்கை எனக்கே
தெரியாது,,.!!!

தலை பிள்ளையாய் பிறந்து
தொலைத்தேன்..!

புணர்ந்து புணர்ந்தே,
என் தாயை
புதைத்துவிட்டார்
என் அருமை தந்தை,,.

கடமையை செய்தாராம்....!!!
என்னை அவர் வயது
உடைய ஒரு கிழவனுக்கு
என்னை க(கூ)ட்டி கொடுத்து...

வலி வலி வலி
மட்டுமே
என் வாழ்கை..!

கனவுகளில் மட்டும்
சிரித்துக்கொண்டிருக்கும்
கேவலமான வாழ்கை..,

மணமான மறுமாதம்
மறித்துப்போனார்
என் கிழக் கணவன்..!

தனியானேன்,
பாதி பிணமானேன்,

சமூகத்தின் சாக்கடை
பார்வைக்கு
நான் மட்டும்
என்ன விதிவிலக்கா..??

மளிகை கடைக்காரன்
என் மஞ்சத்தில்
இடம் கேட்கிறான்,,.!

பூசாரி கருவறைக்கு
அழைக்கிறார்
என்னை
கருத்தரிக்க வைக்க..,

நட்பாய் சிரித்துவிட்டால்
நடையாய் நடக்கின்றன
நரிகள்,..என் வீட்டு தெருவில்,,.,

கொடுமை சமுதாயம்..!
வாழ்கை பறிகொடுத்த
என்னுடன்
மன்னிக்கவும்
என் தேகத்துடன்
வாழ நினைக்கிறது...,

" பாரதி " இந்த மண்ணில்
பிறந்தவன் தானே,
அவன் பெண்களை
பார்த்த பார்வை,
ஏன் உங்களுக்கு
இல்லாமல்  போனது..???

வாழ்கையை வாழ
விரும்புகிறேன்..,
என்னை வேசியாக்க
முயற்சிக்காதீர்கள்,,.

விதி விளையாடியது
இனி
விதியோடு நான்
விளையாட விருக்கிறேன்,,.

ஊருக்கு " ராமன் " ஆனவர்களே..!
தள்ளி நில்லுங்கள்
என் பார்வை உங்களை
போசுக்ககூடும்,,.!
இதோ,
புறப்படுகிறேன்
என்
பெயரை மாற்றி
" பாரதி " என்று...!!!
                                     - இளையபாரதி













No comments:

Post a Comment