Thursday 2 February 2012

புரிந்து கொள்ளடி கள்ளி...!


புரிந்து கொள்ளடி கள்ளி...!

சொல்லில் அடங்காத
காதல்
நம் காதல்,
சொல்லி அடங்காத
காதலும் கூட,

ஊடல் காதலில்
தடுக்க முடியாத ஒன்று,
நம் காதல்
ஊடலினால்
சிதைக்க முடியாத ஒன்று,

நீ,
சொல்வதெல்லாம்
சரி என்கிறாய் நீ,
நீ சரி என்பதை எல்லாம்,
சரி என்கிறேன் நான்,
தவறு என்று தெரிந்தும்..!

நீ
கசக்கி போட்ட
காகிதமும்
கவிதை புத்தகமாக
தெரிகிறது எனக்கு,
நீயோ,
சில நேரங்களில்
என்னையே
கசக்கி போடுகிறாயடி கள்ளி..!
நீ
கசக்குவதால் எனக்கும்
பிடித்து போகிறது
கசிந்து போவது...!

நீ சொல்வதெல்லாம்
சரி,
நான் சொல்வதெல்லாம்
தவறு,
எனக்கோ
நீ
எதை செய்தாலும்
சரிதான்,
எதை சொன்னாலும்
சரிதான்,
என்னை
நீ,
தூக்கி எறிந்ததும்
அப்படித்தானடி...!

என்னை கட்டி அனைத்திடு,
முத்தமிடு,
வசை பாடு,
தழுவிடு,
சண்டையிடு,
என்னை தூக்கி
எரிந்துவிட்டும் போ..!
அதற்க்கும் சரி என்கிறேன்,
ஆனால்,
என்னைப்போல்
உன்னை
காதலிக்கும்
ஒருவனை காட்டு...!!!
சவால்விடுகிறேன்...!!!

நமக்குள் இருப்பது
காதல் மட்டும் அல்ல,
ஒவ்வொரு நொடியும்
கருத்தரிக்கும்
தன்னிகரில்லா
தாய்மை...!

புரிந்து கொள்ளடி கள்ளி...!!!

                                - இளைய பாரதி












No comments:

Post a Comment