Tuesday, 4 June 2013

முதிற்கன்னி



துயில் களைந்து,
பொன் மஞ்சள் குழைத்து,
பொன்மேனி பூசி,
தேகம் குளித்து,
கார் குழல் நனைத்து,
தலைக்கூந்தல் துணி சுருட்டி,
பய பக்தியை
தன் கணவனை
எழுப்பினால்,
அவளும் எழுப்பப்பட்டாள்,
கனவு கலைந்தது
"முதிற்கன்னி"க்கு...!

- இளையபாரதி

Tuesday, 30 April 2013

சாதி அரசியல்...!!!



சாதி அரசியல்...!!!

கொழுத்து திரிகின்றன
சாதி நரிகள்..!
அவைகளின்
கழுத்தை அறுத்து வீசட்டும்
தமிழனின் கைகள்..!!

அறம் செய்து...
அரசியல் செய்ய...
திராணி இல்ல தறுக்கர்கள்...
இவர்கள்..!

ஈழக்கதை பேசி
இருட்டில் வாழும்..
ஈனப் பிறவிகள்..!

காதலில் சாதி பார்க்கும்
கயவர்க் கூட்டமே...
காதலின் மயிர் போன்றது
உன் சாதி..!

மது கொடுத்து சேரும்
கூட்டம் அல்ல...
எங்களின் கூட்டம்..

கோத்திரம்,சூத்திரம் பார்க்கும்
நீ...
எங்கள் ரௌத்திரம்
பார்க்கவில்லை இன்னும்.!

காத்திரு..
உன் ஆணிவேர்
விரைவில் அசைக்கப்படும்...!!!

நாங்களும் சாதி வெறியர்கள்தான்...
நீ என்ன சாதி...
நாங்கள் தமிழ் சாதி..!!!

                                            - இளையபாரதி

Friday, 12 April 2013

முடி சூட்டு விழா...!!!



முடி சூட்டு விழா...!!!

புத்தாடை வாங்க
பணம் இல்லை மகனே..,
பொத்தி பொத்தி
வைத்த சில்லறையில்
குட்டி கிரீடம் ஒன்று
உனக்காக வாங்கினேன்...!
புது கிரீடம்
உனக்கு சூடுகிறேன்...
நட்டந்தரையில்,
நடு வீதியில்,
உச்சி வெய்யிலில்,..
நாம் கொண்டாடுவோம்,.,
உன் முடி சூட்டு விழாவை..!
உடைந்து போன
சொந்தங்களை உதைத்து,
பதற வைக்கும்...
பசியை மறந்து..
விதி தின்ற அப்பனை
விழியில் நிறுத்தி..
என் இளவரசனுக்கு
முடிசூட்டு விழா...
நடத்துகிறேன்...
பாதை மாறி செல்லும்
பாத சாரிகளே..
வாருங்கள் வாருங்கள்
என் குட்டி இளவரசனை
வாழ்த்த வாருங்கள்...
ஆளுக்கொரு தொப்பி
வாங்குங்கள்..
எங்கள் மதிய
உணவு "கனவு"
நிஜமாகும்...!!
                         
                                                - இளையபாரதி

Wednesday, 10 April 2013

அவசரம் இல்லை.. !!!




எங்கள் நரம்புகள் கிழிக்கப்பட்டு....
நாடி துடிப்பு நின்று,
ரகசிய உறுப்புக்கள்
ரணமாக்கப்பட்டு..,
துப்பாக்கி குண்டுகளும் துளைத்து,
பால் கொடுத்த நெஞ்சங்கள்..,
அறுக்கப்பட்டு..,
எங்கள் சவங்கள் காக்கைகளுக்கு
இறையாக்கப்பட்டு...
காக்கை உண்ட மீதி,
"தீ"க்கு இறையாக்கப்பட்டு..
எங்கள் சாம்பல்..
காற்றுக்கு இறையாகட்டும்..!
அவசரம் இல்லை..
அவசரம் இல்லை...
இறுதி ஊர்வல வேலை
உங்களுக்கு இல்லை...
கிரிக்கெட் பார்த்துவிட்டு
மெதுவாய் வாருங்கள்...!
             
                                                        - இளையபாரதி

Saturday, 30 March 2013

திருவிழா...!!!





நீ
என்
பின்னால் வருகையில்
நான் உன்னை
திரும்பி பார்த்தால்
நீ
என்னை திட்டுவாய்
என்பது தெரிந்தும்
திரும்ப திரும்ப
திரும்பி திரும்பி
உன்னை பார்ப்பேன்
நான்
திரும்பியவுடன்
நீ
என்னை
திட்டிவிட்டு
திருட்டுத்தனமாக
சிரிப்பது
திருவிழாவாக
இருக்கும் எனக்கு...!!!

                                  - இளையபாரதி
 

கொஞ்சல்


நீ, 
என்னை 
கொஞ்சிக்கொண்டிருந்தபோது,
என் உயிர் 
என்னிடம் 
கெஞ்சிக்கொண்டிருந்தது,
இவளுக்காக
என்னை
விட்டு விடுவாயா
என்று...???

           

                    - இளையபாரதி

அடிக்கடி




" ஏன்டா இப்படி பன்ற...?"..,என்ற
உன்
செல்ல கெஞ்சலை
அடிக்கடி கேட்கவே.,
அடிக்கடி
அப்படியெல்லாம்
செய்தேன் நான்...!!!

                            - இளையபாரதி

என்று தணியும்..?


Thursday, 21 March 2013


நீ...
முத்தமிட்ட
மறு நொடியே 
அந்த குழந்தையின் 
கண்ணங்களை
நான்....
முத்தமிட்டேன்...
ஒரு குழப்பம்
குழந்தையின்
கண்ணங்கள் இனிப்பா..?
உன் எச்சில்
" இனிப்பா "...???

- இளையபாரதி

Thursday, 7 March 2013

ஆன்ராய்டு அலைபேசியில் என் கவிதை தொகுப்பு.....

Get this cool Android App

பேடிகள் நாங்கள்...!!!



பேடிகள் நாங்கள்..!

ஈழம் வாழும் சொந்தங்களே..,
கொன்று குவியுங்கள் எங்களை..
பேடி நாங்கள்..!

அயல் நாட்டவன் ஒருவன்
வெளிக்கொணரும்,
ஆவணப்படம் பார்த்தால்தான்..
உங்கள் வலி
உணரக்கூடும் எங்களால்...
ஆம் பேடிகள் நாங்கள்...!

ஆயுதம் கொடுத்து
உங்களை கொலை செய்த
ஒரு கொலைகார நாட்டில்
இன்னும் வாழ்கிறோம்
ஆம் பேடிகள் நாங்கள்...!

கேடிகளை அரசாளவிட்டு
கோடிகளில் அவர்களை புரளவிட்டு,
பிச்சை கேட்க்கும்
பேடிகள் நாங்கள்..!!

உயிர் படகு ஏறி
உயிர் வாழ
மீன்பிடிக்க செல்லும்
மீனவ அண்ணனே...!
சுட்டு கடலில் வீசு எங்களை..
நீ சுடப்பட்ட நேரத்தில்
ஒரு திரை படத்திற்காக
வீதியில் இறங்கி போராடினோம்..
போராளி பேடிகள் நாங்கள்...!

வாழ்க்கைக்காக போராடும்
இடிந்தகரை உறவுகளே..
அணுஉலை கசிந்தால் என்ன..??
மக்கள் குருதி கசிந்தால் என்ன..??
காதல் கசிந்தால் போதும்
எங்களுக்கு..!
மின்சாரம் வந்தால் போதும்
எங்களுக்கு..!
இப்படிதான் சிந்திப்போம்
ஏன் என்று கேட்காதீர்கள்..
பேடிகள் நாங்கள்..!

மரண தண்டனை
விதிக்கப்பட்டு..
ஒவ்வொரு நாளும்
மரணத்தை வெல்லும்..
மும்மூர்த்தி சகோதரர்களே..
இந்தியா கிரிக்கெட்டில்
தோற்றதனால்..சோகத்தில்
உங்களுக்காக,,..
வாய்திறக்க முடியவில்லை எங்களால்..,
உங்களுக்கு தெரியாதா என்ன.?
பேடிகள் நாங்கள்..!

வீரதிருமகனின் வீர மகனே,
இனிப்புண்டு,
துப்பாக்கி குண்டுகளை.,
நெஞ்சம் நிமிர்த்தி,.
நீ சாய்ந்தபோது..
காதலர் தின கொண்டாட்டங்களில்
இருந்துவிட்டோம்..
பேடிகள் நாங்கள்...!!

இந்தியனாக இருக்கும்வரை
பேடிகள்தான் நாங்கள்..
ஆம் பேடிகள்தான் நாங்கள்
பேடித்தனம் விட்டு...மனிதனாவோம்
இன்று முதல்
இந்தியன் அல்ல நான் "தமிழன்"
தமிழனாவோம்..
"தலை நிமிரட்டும் தமிழன்"...!!!

- இளையபாரதி 

Monday, 4 March 2013

" கல்கி " வார இதழிலில் (27.05.2012) வெளியான எனது கவிதை...!!!


இந்த வார " கல்கி " வார இதழிலில் (27.05.2012) வெளியான எனது கவிதை...!!!
இதை "கல்கி"கு அனுப்பி வைத்த அக்கா மௌலா தேவி அவர்களுக்கு என் நெஞ்சினிக்கும் நன்றிகள் கோடி..!!!

பாரதிக்கு ஒரு கடிதம்..!!!



பாரதிக்கு ஒரு கடிதம்..!!!

நான் விட்டுப்போன 
வேலைகள் பல 
கிடப்பில் கிடக்க 
எனக்கு ஏன் கடிதம்
எழுதுகிறான் இந்த
பித்தன் என்று கோபப்படாதே
மகா கவியே..!

சில சந்தேகங்கள் கேட்டு
சில யோசனை கேட்டு
சில முடிவு கேட்டு..
எழுதுகிறேன் இக்கடிதம்
தீர்க்க முடிந்தவன்
நீ மட்டுமே..!!
தீர்ப்பு தெரிந்தவனும்
நீ மட்டுமே...!!

தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில்
இந்த ஜெகத்தினை
அழித்திடுவோம் என்றாய்..!
தமிழனுக்கு தண்ணீர்
தர மறுத்தால்
நாங்கள் என்ன செய்ய...??

வரப்போகும் தலைமுறையை
ஊனமாக்கிவிட்டு...
என் பேதை மக்களுக்கு
மின்சார ஆசை காட்டும்
முட்டாள் மந்திரிகளை
என்ன செய்ய..??

சிங்கள தீவிற்க்கொரு
பாலம் அமைப்போம் என்றாய்
நம் இனம் அழிக்கப்பட்டு
பசியாறினான் சிங்களன் ..
சிங்கள தீவிற்கு
பாலம் கட்டலாமா...??
பாசம் காட்டலாமா..??
பாடை கட்டலாமா..??
என்ன செய்ய நாங்கள்..???

ரௌத்திரம் பழகு என்றாய்
கோத்திரம் பழகுகிறார்கள்
சில மக்கள்
என்ன செய்ய நாங்கள்..??

சாதிகள் இல்லையென்றாய்
சாதி இல்லையென்றால்
பாதி நாடு இருக்காது இங்கு..!!

காமராசர்,
முத்துராமலிங்கர்
அம்பேத்கர்
போன்ற மா மனிதர்களையும்
சாதிவாரியாக பார்க்கும்
குப்பை சமூகமாகத்தான்
இருக்கிறது இன்னும்,
என்ன செய்ய நாங்கள்...!

சாதிக்க வேண்டிய
மாணவர்கள் இன்று
சண்டியராக நினைக்கிறார்கள்
நாங்க என்ன செய்ய..??

வாக்கு கொடுத்துவிட்டு
போக்குமாறி போகும்
போலி மனிதர்களை
அதான் அரசியல் வியாதிகளை
என்ன செய்ய..?

தீர்த்தக் கரையினில்
கண்ணம்மாவிற்காக
காத்திருந்தாய் நீ..
இன்று இடிந்தகரையில்
விடியலுக்கு காத்திருக்கும்
இடிந்துபோன இதயங்களுக்கு
என்ன சேதி சொல்ல நாங்கள்..??

உண்மைக்காக உயிர்விட
துணிந்தாய் நீ..!
ஊழலுக்காக உண்மையை
விற்கும்
உத்தம அரசியல்வாதிகளை
என்ன செய்ய நாங்கள்..?

நேர்பட பேசு என்றாய்
நேர்பட பேசினால்
இந்திய
இறையாண்மைக்கு பங்கமாம்
என்ன செய்ய நாங்கள்..???

அச்சமில்லை என்றாய்
எதுவும் எங்களுக்கு
மிச்சமில்லாமல்
சுரண்டிக்கொண்டு போகிறார்கள்..
என்ன செய்ய வேண்டும் நாங்கள்..!

ஒரு காலம் கடந்த
வேண்டுகோள் உன்னிடம்
கவிதையை கையில்
எடுத்த நீ
அரசியலை கையில்
எடுத்திருந்தால்
எங்களுக்கு இந்த நிலை
வந்திருக்காது...!!

இரண்டு வழி
உண்டு தலைவா
ஒன்று
அங்கிருந்து வழிநடத்து
அல்லது
மீண்டும் பிறந்து வா...

இங்கு பாரதி பித்தர்கள்
ஏராளம்
நாம் நல்லதொரு
அரசியல் படைப்போம்...!!!

விரைவில்
" புரட்சி" வெடிப்பது மட்டும்
சத்தியம்...!!!

- இளையபாரதி

" கவிதை நாள் "



எம் தலைவன் பிறந்த நாள்..!!!

உனக்கு கவி 
எழுதும் தகுதி 
எனக்கு இல்லை தலைவா..
ஆனால்
உனக்கு கவி
எழுதும் கடமை
எனக்கு இருக்கிறது....!

நீ பிறப்பெடுத்த
இந்நாள்...
இந்திய நன்னாள்....
தமிழ் புதுபிறப்பு எடுத்த நாள்....!
130 வது பிறந்தநாள்
உனக்கு...!

இன்று நீ இருந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்
தலைவா..??
நீ செய்ய
நினைத்தவைகளை
நான் செய்கிறேன்...

கண்களிருந்தும்
குருடாகி கிடக்கும்...
செவிடர்களிடம்...
எத்தனை முறை
உன் கவிகள் பேச...??

நீ அன்று பார்த்த
" நடிப்பு சுதேசி"களின்
பேரன் பேத்திகள்...
அதிகம் உள்ளனர் நாட்டில்...
இன்று நீ இருந்திருந்தால்
இவர்களை
என்ன செய்திருப்பாய்
தலைவா..??
நீ செய்ய
நினைத்தவைகளை
நான் செய்கிறேன்...

காதல் திருமணம்
செய்தால் கலவரம்...
காரணம் கேட்டால் சாதி..!

சாதி பிரிக்கும்
சாணக்கியர்களை...
சத்தமில்லாமல்..
சங்கை கடித்து
துப்பத்தான் போகிறேன் நான்...!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

தமிழ் பேசினால்
தகுதிக்குறைவு என்று
தப்பட்டம் அடிக்கும்
தரம்கெட்ட
தடியர்களை...
தர தர வென
தரையில் போட்டு
தவிடு பொடி ஆக்கப்போகிறேன்...!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

காதல் என்ற பெயரில்...
காம வேடம் பூண்டு
காம களியாட்டம் போடும்
காளையர்கள் மற்றும்
கன்னியர்களின்
கண்களை....
களவாடி வந்து
கசக்கி எரிக்கப்போகிறேன்...!!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

பாரத நாட்டை
கூறு போட்டு
வியாபாரம் நடக்கிறது
தலைவா..!!

பாரத நாட்டை
பாரதி நாடென்று...
பெயர் சூட்டுவோம்...
வெள்ளையன்
ஒருவன் வர மாட்டான்...
வியாபாரம் செய்ய...!

அன்னையர் நாள் இருக்க....
தந்தையார் நாள் இருக்க....
நண்பர்கள் நாள் இருக்க....
காதலர் நாள் இருக்க....
கவிதை நாள் இல்லை...

இவ்வருடம் முதல்
உன் பிறந்தநாள்
" கவிதை நாள் "..என
நாங்கள்
" இனி ஒரு விதி செய்வோம் "...!!!

- இளையபாரதி

அழகாக்கியது....


நீ...
சொன்னதை 
நான்... 
செய்யவில்லை என்று..
நெற்றி சுருக்கி 
உதடு சுழித்து...
நீ...
பார்க்கும்
அந்த..உரிமையான
பார்வைதான்...
அழகாக்கியது...
என்னையும்
நம் காதலையும்...!!!

                 - இளையபாரதி