Wednesday, 20 June 2012




பிழைப்புக்கு பாதை தேடி
பட்டணம் வந்த
பரதேசிகளை ...!
பட்டைஇட்டு பகவான்
இவன்  என்று
பிதற்றுகிறீர்...!!!

பெண்ணிடம் சல்லாபம்
கொண்டாடுபவன் கடவுளாம்...!
"கதவை திற காற்று வரட்டும்"
என்று சொல்லி...
உள்ளே அழைத்து
கதவை பூட்டுபவன்
பிரம்மச்சாரியா..??

போதை போதனைகளை
கேட்க்கும் பேதை
மக்களே
பேடிகளை போற்றும்
புண்ணியவான்களே...!

புழுதியில் படுத்துறங்கியது
போதும் போதும்...!

கடவுள் என்பவன்
இருப்பானாயின்
அவனிடம் நாம்  பேச
போலி தூதர்கள் எதற்கு..??

நேரே நம்மிடம் பேசாத
கடவுள் எதற்கு..??

ஆன்மிகம் இன்று
ஆண்மிகமாகிவிட்டது..!!!

மனிதம் மறந்துவிட்டோம்
மனிதர்களையும் மறுத்துவிட்டோம்
மடையர்கள் போதுமென்று...!

காலப்போக்கில் அரசியல்வாதிகள்
கடவுளாக்கப்படலாம்..,
நடிகர்கள் அதற்க்கு
பூசாரிகலாகலாம்...
எப்படி ஆனாலும்
பேதை மக்களே
நீங்கள்
கடவுளுக்கு உண்டியலிலும்
பூசாரிக்கு தட்டிலும்
பிச்சை போட்டு கொண்டுதான்
இருப்பீர்கள்...!!!

அவர்களையே
வணங்கிக்கொண்டு
அதனால் நீங்கள்
வாழ்வதாக நினைத்துக்கொண்டு...!!!

                                          - இளையபாரதி








Tuesday, 19 June 2012


இதயத்தின் ஒரு பக்கத்தில்
கசிந்தாலும்..,
மறுபக்கம்....
இதயத்திற்கே தெரியாமல்
சுரப்பதுதான்
" காதல் "...!!!
                               
-இளையபாரதி

Friday, 15 June 2012

"......நட்பு......"








நயவஞ்சகமும் நஞ்சும்
மிகுந்த மனங்களுக்கு
நடுவே...
நெஞ்சம் நிமிர்த்தி
தோள்கள் திமிர
நடை போடுகிறது
களங்கமில்லா
நட்பு...!

காதலி
இருந்தும்...
காதலுக்கும் மேல்
காதலிக்கிறார்கள்
நட்பை..!
காதலிகளுக்கு தெரியாமல்...!

ஒருவேளை மனிதனின்
ஆறாம் அறிவு
இந்த நட்பு தானோ..?

"நீரில்லா நெற்றிப் பாழ்" என்கிறது
ஒரு மதம்...
நட்பில்லா மனிதன்
நடை பிணம் தான் உறுதியாக...,

விலங்குகள் அஃறிணை
மனிதர்கள் உயர்திணை
நண்பன் உள்ளவன்
நட்புத்திணை..
உயர்திணையை விட
உயர்வானவன் என்று
"இனி ஒரு விதி செய்வோம்"


நண்பனுக்காய் உயிர் விட்டவர்கள்
இங்கு இல்லை,
காதலை போலே
உயிர் எடுப்பது அல்ல
நட்பு...
உயிர் காப்பது நட்பு...!

"நட்பு"
இதற்க்கு ஒரு
புது காவியம் எழுத
உலக காகிதங்கள் போதாது...!

நன்றி கூறினால் பிடிக்காது
நன்றி எதிர்ப்பார்தலும் ஆகாது
ஆனாலும்
நன்றி மறக்காது
இந்த "நட்பு"...

எதிர்பாராமல் வரும்,
எதிர்பாரா நேரத்தில் உதவும்
எதிர்பார்க்கா இன்பம்
தரும் இந்த "நட்பு"
எதையும் எதிர்பார்ப்பதில்லை
எவரிடமும்..!!!

தனித்துவிடப்படும் தருணத்தில்
தோல் கொடுத்து
தட்டிக் கொடுக்க
தோழனோ ,தோழியோ இருந்தால்
தோற்ற மனிதன்
உலகில் இல்லை..!!!

அன்பானவன்,பண்பானவன்
என்பதைவிட
நட்ப்பானவன் என்று
பெயரெடுப்போம்...
நட்பை வாழ...!!!

- இளையபாரதி
 

Monday, 21 May 2012




காதல் கடிதம் எழுத
சொல்லும் கள்ளி !!
எப்படி உனக்கு புரியும்

என் எழுத்து பேசும்
வார்த்தைகள்?

உனக்கு புரிந்தது
நம்
காதல் மொழிதானே?

                     - இளையபாரதி

Thursday, 17 May 2012


நீயும் தீவிரவாதிதான் 
என் உயிர் 
கொல்லும் 
உன் வெட்கம்
நீ வைத்திருக்கிறாய் 
ஆயுதமாக..!!!


                - இளையபாரதி

Tuesday, 15 May 2012


உன் புன்னகை
மறைத்து நீ
சிரிக்கும்
அந்த வெட்க சிரிப்பைதான்
கடன் கேட்க்கின்றன
மலர்கள்..!!!

- இளையபாரதி

நீ என்னை
கேலி செய்துவிட்டு
சிரிக்கும்
நமட்டு சிரிப்பில்தான்
உன் நாணம்
கண்டேன் நான்..!!!

- இளையபாரதி

கீழ விழுந்த
விண்மீன்,
அண்ணார்ந்து தன
சக விண்மீனை
பார்ப்பது போலதான்
நீ படுத்து கொண்டு
அண்ணார்ந்து பார்ப்பது..!!!

- இளையபாரதி

" க பு மு "




க பு மு என்றாய்
என்ன..? என்றேன்
கட்டி புடிச்சி முத்தம்
என்றாய்..
ஹ ஹ
நீ கட்டி பிடித்தால்
முக்தி அதுதான்
க பு மு என்றேன் நான்..!!!

               - இளையபாரதி

Monday, 14 May 2012





விரல் எடுத்து
நீ
கடிக்க
ஏமார்ந்து  போனேன்
நான்
நீ
கடித்தது
உன்
விரல்கள் என்பதால்...!!!

                     - இளையபாரதி


" காகிதப் பூக்கள் "



மனம் இருந்தும்
மறுத்துப்போன உயிரை
கொண்ட உயிரினங்கள்
நாங்கள்..!!!

மணம் இருந்தும்
மணக்க முடியாத
காகித பூக்கள்
நாங்கள்..!!!

முதிர் கன்னி சகோதரிக்கு
திருமணம்,
நோயாளி தந்தைக்கு
மருத்துவம்,
அடுப்பங்கறை அம்மாவிற்கு
கவுரவம்,
இவற்றிற்காக
தாய் மண்ணை
தொலைத்து வந்து
வாழ்கையை தேடும்
காகித பூக்கள்
நாங்கள்...!!!

தாய்  மண்ணை
தொலைத்த
குற்ற உணர்வு
தாயை தொலைத்த
கொடிய உணர்வு..!!!

 காகிதப் பூக்களாய்
இருப்பதில் ஒரே ஒரு
மகிழ்ச்சி எங்களுக்கு
வாடுவதில்லை
" நாங்கள் "...!!!

" நாங்கள் "
எங்கள்
வீட்டில் அடுப்பெரிய
அயல் நாட்டில்
எங்களை எரித்துக்கொள்ளும்
பூக்கள்
" காகிதப் பூக்கள் "

                           - இளையபாரதி

 
நடு நிசியில் 
நட்சத்திரம் சிந்திய 
ஒலி கேட்க 
திரும்பி பார்த்தால்
" நீ " சிரிக்கிறாய்..!!! 

                  - இளையபாரதி
செதுக்கப்பட்ட சிலையில் 
பறிக்கப்பட்ட குழி 
உன் " கண்ணக்குழி " 

                         - இளையபாரதி


உன் கண்மை எடுத்து 
உன் வியர்வை குழைத்து 
வானத்தில் 
வீசியதே 
" வானவில் " ஆகிப்போனது..!!!

                              - இளையபாரதி

Saturday, 12 May 2012

நீ நீதான் அம்மா..!!!



" அம்மா "
உன் தொப்புள்கொடி  அறுத்து
உயிர் பெற்ற எனக்கு
தகுதி இல்லை " அம்மா ",

உனக்கு வாழ்த்து சொல்ல
உயிர் கொடுத்த உத்தமியே..

உன்னை போலே
யார் இங்கே..?"அம்மா
கருவாகி,உருவாகி
ஈன்றெடுத்து..
உலகம் காட்டினாய்
என் உலகம்
நீதானே அம்மா..!

உயர உயர பறந்தாலும்
பருந்தாகத
ஊர் குருவி போலதான் " அம்மா "..!
எத்தனை உறவுகள்
வந்தாலும்,இருந்தாலும்
நீ நீதான் அம்மா..!

எத்தனை மென்மையான
பஞ்சு மெத்தையில் உறங்கினாலும்
உன் மடிக்கு
ஈடில்லை அம்மா..

என் தசை,நரம்புகள்
உதிரம் அனைத்திலும்
எழுதப்பட்டுள்ளது
உன் பெயர் அம்மா.. !

என் உயிரின்
சொந்தக்காரி நீ..
என் சுவாசம்
உன்னிடம்
நான் பெற்ற கடன்..!

கவிதை போதாது
உன் பெருமை பேச...

எதை சொல்லி ஈடு செய்ய
எதை கொடுத்து ஈடு செய்ய
" அம்மா "...
என்ன வேண்டும் அம்மா
உனக்கு..??

உயிரா..? அன்பா..?? பாசமா..??
எதை நீ கேட்டாலும்
அது உன்னிடம் நான்
பெற்றதாகத்தான் இருக்கும்
" அம்மா "..!!!

நீ நீதான்
அம்மா என் அம்மா..!!!
தெய்வத்திற்கு தெய்வம்
அம்மா நீ..!!!

நீ நீதான் அம்மா..!!!

                        -    - இளையபாரதி