Friday 24 October 2014

இசைஞானி இளையராஜாவை சந்தித்த என் நண்பனுக்காக நான் எழுதிய கவிதை...



அந்த நாள் விடியும்போது
தெரிந்திருக்கவில்லை எனக்கு,
என் ஆத்மாவை
வெளியே எடுத்து
இசை மீட்டிய 
விரல்களை பிடிப்பேனென்று,
இது நாள் வரை
நீ ஒரு இசைஞானி என்று
கூறி ஏமாற்றப்பட்டிருக்கிறேன்
இசைஞானி அல்ல நீ,
நீ இசையின் இறைவன்,
பிறந்தது முதல் மனித
வாழ்வோடு ஒன்றிப்போன
காற்றை போல,
என்னோடு கலந்துப்போனாய் நீ,
இசை வீதியில் நடந்தால்
உன் உருவமே நிழலாக,
அதெப்படி உனக்கு சாத்தியமானது,
உயிரை உலுக்கி எடுப்பது,??
அந்த நாள் விடியும்போது
தெரிந்திருக்கவில்லை எனக்கு,
என் ஆத்மாவை
வெளியே எடுத்து
இசை மீட்டிய
விரல்களை பிடிப்பேனென்று,
இசையில் உயிர் குடித்த
நீ,
நிழற்படங்களை நிஜப்படங்களாக
எடுப்பவனென்பது இங்கு
பலர் அறிந்திருக்கவில்லை,
நான் அறிவேன்,
சங்கீதம் உனக்கு சரளம்தான்
நிழற்படங்கள் எடுப்பதும்
உனக்கு பிடித்தவைகளா..?
இதை அறிந்த நொடி முதல்
திமிராய் நடக்கிறேன் நான்,
படம் எடுத்த பொடியன்
என்னை,
"வா" என்றழைத்து
வலப்புறம் நிறுத்தி
படம் பிடிக்க சொன்னாய்..,
அப்போது
சொல்லத்தான் தோன்றியது
இனி என் உயிரோடு
"விளையாடாதீர்கள்"என்று
குழந்தையை ஈன்றெடுத்த
தாயின் மகிழ்ச்சி எனக்கு
இதையும் தாண்டி
எனக்கு என்ன வேண்டும்..?
இதையும் தாண்டி
ஒருவனை எது மகிழ்விக்கும்...?
இசை இறைவனை கண்டேன்
இனி நான் இறைவனடி
சேர்ந்தாலும் இன்பமே..
அந்த நாள் விடியும்போது
தெரிந்திருக்கவில்லை எனக்கு,
என் ஆத்மாவை
வெளியே எடுத்து
இசை மீட்டிய
விரல்களை பிடிப்பேனென்று,..
இறைவனைக் கண்ட இன்பத்தில் நான்
கவிதையாக்கம் - இளையபாரதி

No comments:

Post a Comment