Saturday 6 July 2013

இளவரசன்


தமிழ் மொழி  ஊனமானது
வார்த்தை ஒன்றுமில்லாமல்..
எந்த வார்த்தை சொல்லி
ஈடு செய்ய முடியும் தமிழால்
இளவரசன் இல்லாமல் போனதை

கேடுகெட்ட சமூகத்தின்
ஒருவனானேன்
கூனி குறுகி நிற்கிறது
என் மனசாட்சி,

கயவன் இவன் என தெரிந்தும்
கழுத்தை நெறித்தே
கொல்லாமல் விட்டதற்கு
என் பாலினம் எது..?என்று
சோதனை செய்ய சொல்கிறது
என் மனது..!

சாதி கொண்டாடும்
சாதி வேசிகளே,
ரத்ததானம் செய்துவிடாதீர்..!
உங்கள் சிவப்பு சாக்கடையை
எம் மக்கள்
ரத்தத்தோடு கலக்காதீர்...!

சாதி சுவாசிக்கும் பிண்டங்களே
மலம் உண்ணும் நாயும்..
காதல் உண்ணும் நீங்களும்..
வெவ்வேறா என்ன..?

காதலின் மயிர் போன்றது
உங்கள்  சாதி,..

தமிழனுக்கு  பிடித்துவிட்டால்
மயிரானாலும் உயிர்,
தமிழன் வெறுத்துவிட்டால்
உயிரானாலும் மயிர்..!!

மயிராய் நினைத்து
உயிரைவிட்டான் இளவரசன்
இளவரசன் குருதி குடித்த
சாதி ஓநாய்களே...,
எப்படி இருந்தது
காதலின் குருதி..,???

வீழ்த்தப்படவில்லை அவன்
தன்னைத்தானே
விதைத்திருக்கிறான்..,
சாதி அழிப்பிற்காக...!!

"தமிழனுக்கு  பிடித்துவிட்டால்
மயிரானாலும் உயிர்,
தமிழன் வெறுத்துவிட்டால்
உயிரானாலும் மயிர்"..!!

                                                - இளையபாரதி

1 comment:

  1. தமிழில் இதை விட வேறு என்ன வார்த்தை வேண்டும் .... நானும் வெட்கி தலை குணிகிறேன் சாதி வெறி பிடித்த சண்டாளர்கள் வாழும் அதே காலத்தில் வழ்துகொண்டிருப்பதர்க்கு..

    ReplyDelete