Monday 4 March 2013

" கவிதை நாள் "



எம் தலைவன் பிறந்த நாள்..!!!

உனக்கு கவி 
எழுதும் தகுதி 
எனக்கு இல்லை தலைவா..
ஆனால்
உனக்கு கவி
எழுதும் கடமை
எனக்கு இருக்கிறது....!

நீ பிறப்பெடுத்த
இந்நாள்...
இந்திய நன்னாள்....
தமிழ் புதுபிறப்பு எடுத்த நாள்....!
130 வது பிறந்தநாள்
உனக்கு...!

இன்று நீ இருந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்
தலைவா..??
நீ செய்ய
நினைத்தவைகளை
நான் செய்கிறேன்...

கண்களிருந்தும்
குருடாகி கிடக்கும்...
செவிடர்களிடம்...
எத்தனை முறை
உன் கவிகள் பேச...??

நீ அன்று பார்த்த
" நடிப்பு சுதேசி"களின்
பேரன் பேத்திகள்...
அதிகம் உள்ளனர் நாட்டில்...
இன்று நீ இருந்திருந்தால்
இவர்களை
என்ன செய்திருப்பாய்
தலைவா..??
நீ செய்ய
நினைத்தவைகளை
நான் செய்கிறேன்...

காதல் திருமணம்
செய்தால் கலவரம்...
காரணம் கேட்டால் சாதி..!

சாதி பிரிக்கும்
சாணக்கியர்களை...
சத்தமில்லாமல்..
சங்கை கடித்து
துப்பத்தான் போகிறேன் நான்...!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

தமிழ் பேசினால்
தகுதிக்குறைவு என்று
தப்பட்டம் அடிக்கும்
தரம்கெட்ட
தடியர்களை...
தர தர வென
தரையில் போட்டு
தவிடு பொடி ஆக்கப்போகிறேன்...!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

காதல் என்ற பெயரில்...
காம வேடம் பூண்டு
காம களியாட்டம் போடும்
காளையர்கள் மற்றும்
கன்னியர்களின்
கண்களை....
களவாடி வந்து
கசக்கி எரிக்கப்போகிறேன்...!!
என் பலமாக என்னோடு
இரு தலைவா..!

பாரத நாட்டை
கூறு போட்டு
வியாபாரம் நடக்கிறது
தலைவா..!!

பாரத நாட்டை
பாரதி நாடென்று...
பெயர் சூட்டுவோம்...
வெள்ளையன்
ஒருவன் வர மாட்டான்...
வியாபாரம் செய்ய...!

அன்னையர் நாள் இருக்க....
தந்தையார் நாள் இருக்க....
நண்பர்கள் நாள் இருக்க....
காதலர் நாள் இருக்க....
கவிதை நாள் இல்லை...

இவ்வருடம் முதல்
உன் பிறந்தநாள்
" கவிதை நாள் "..என
நாங்கள்
" இனி ஒரு விதி செய்வோம் "...!!!

- இளையபாரதி

No comments:

Post a Comment