Wednesday 2 May 2012

நாம் நாமாவது எப்போது..???



நாம் நாமாவது எப்போது..???

நாம் நாமாவது எப்போது..???

விபத்தில் சிக்கி
நடுங்கி நடுங்கி
சாக கிடக்கும்
ஓர் உயிரை
வேடிக்கை மட்டும்
பார்த்து செல்லும்
நாம் மனிதனாவதெப்போது..?

சில்லறை சேர்க்க
ஓடிக்கொண்டிருக்கும்
இயந்திர வாழ்வில்
மனிதர்களை நாம்
சேர்ப்பது எப்போது..?

கட்சி வேடமிட்டு
தனிமனிதனுக்கு
வாழ்க முழக்கமிடும்
நாம்,
நம் வாழ்வை
வாழ்வது எப்போது..?

இலவசம் பெற்று
இன்பம் காணும் நாம்,
இலவசங்களை இடறி
அடிப்பது எப்போது..?

இலவசங்கள் நம்மை
சோம்பேறிகள் ஆக்கும்
என மற்றவருக்கு
இசைவது எப்போது..?

குழந்தைக்கு பால்
சுரக்காத மார்பகங்கள்
இருக்கையில்
பால் புட்டி வாங்காமல்
மதிகெட்டு
மதுக் கடைகளில்
மரணத்தை அழைக்கும்
குடி மகன்களே
அவரவர் மனைவியின்
வயிற்றை
நிரப்புவதேப்போது..???


மனைவி இருந்தும்
விபச்சாரி தேடும்
மானம் கேட்டவன்
போல
"தமிழ்" இருக்கையில்
பிற மொழி எதற்கு..?


நம் குடிசைகள்
மாளிகையாவது எப்போது..???

மதுக்கடைகள்
பள்ளிகள் ஆவது எப்போது...???

வாழ்கையை வாழ்வது எப்போது

நம் வாழ்கையை

நான் வாழ்வது எப்போது ..?

நாம் நாமாவது எப்போது..???

                            - இளையபாரதி

1 comment:

  1. இப்போதே நிகழ்ந்துவிடாதா அத்துனையும் என எதிர்பார்க்கும்(எதிர்பார்க்க மட்டும்) செய்யும் பலரில்...ஒருவளாய்....அருமை தம்பி...

    ReplyDelete