Friday 9 March 2012

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...

சிறியதாய் எனக்கு அறிவு பரிமாறிய என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்...

எப்படி அடைப்பது
உங்களிடம் பட்ட கடனை..?
பணம் கடன் பட்டிருந்தால்...
பணம் கொண்டு அடைக்கலாம்...,
அறிவு கடன் பட்டேன்
எப்படி அடைப்பேன்..?

நீங்கள் அன்று
என்னால் எத்தனை
இன்னல்களை அனுபவித்தீர்கள்..?
இன்று நான்
இன்பமாய் வாழ
வழி வகுத்தீர்கள்..!

சிவாஜி யின்  பாடத்தில்
" வீரம் " போதித்தீர்கள்..!

புத்தனின் பாடத்தில்
" பொறுமை " போதித்தீர்கள்..!

எம் பாரதியின் பாடத்தில்
எல்லாமே போதித்தீர்கள்...!

ஒவ்வொரு பாடம்
எடுக்கும் போதும்
அந்த கதாபாத்திரமாக
திகழ்ந்தீர்கள் இன்னும்
என் கண் முன்னே
நீங்கள் அதே கதாபாத்திரமாய்...!

பள்ளியில் தாயை
பிரிந்த குறை
கண்டதில்லை நான்..!

மாதா, பிதா,குரு, தெய்வம் என்பார்கள்...!
ஆனால்
" குரு " இதில் மாதா,பிதா,தெய்வம்
மூன்றும் சங்கமித்தது எப்படி..?

" குரு " நீங்கள் " குரு " மட்டுமல்ல
என் அறிவின் " கரு "...!

உங்களிடம் அறிவுக் கடன்
பெற்றிருக்கிறேன்,
உங்களுக்கு அறிவுக் கடன்
பட்டிருக்கிறேன் ,
என எப்படிப்
பார்த்தாலும்
அறிவு கடனாளியாக இருப்பது
எனக்கு பெருமையே..!!!

என்
தமிழ் கற்றுக்கொண்டது
உங்களிடம் இருந்தல்லவா...?

சில நேரத்தில்
கடவுளை
வெறுத்தாலும்
உங்களை மட்டும்
வணங்க தோன்றுகிறது...!!!

" குருவே சரணம் "

" குரு "
நீ
என் அறிவின்
" கரு"
                             - இளையபாரதி

No comments:

Post a Comment