Monday 12 December 2011

பாரதி! பாரதி!! பாரதி!!!


பசி தாங்க மாட்டான்
என் தலைவன்,
அவன் பசி அல்ல
சிட்டுக்குருவியின் பசி,

ரௌத்திரம் பேசியவன்,
காதலை சுவாசித்தவன்,

சாட்டை எடுக்காமல்,
கவிதையால் அடித்தவன்,

நம் நரம்பு
முறுக்கேற வைக்கும்
நளினம் தெரிந்தவன்,

குருதி வழியும்
கண்கள் கொண்டவன்,

தன் வீட்டில்
மேசை இல்லாதவன்
ஆனால் இன்று
எல்லா வீட்டு
மேசைகளையும்
அலகரிப்பவன்,

பயம் அற்றவன்,
படை நடுங்க செய்தவன்,

காலனை சபித்தவன்,
காதலை சுவைத்தவன்,
காதலாய் ஆனவன்,

இன்று
கவிஞர்களுக்கு ஆதவன்,

பற்றி எரியும்
பக்தி கொண்டான்,
தடம் மாறா
பாதை கொண்டான்,

சினம் கொண்ட
காதலன் அவன்,
அவன் சினத்தையும்
காதலிக்க செய்தான்,

மகாகவியே,
எங்கு இருக்கிறாய்?
மீண்டும் வா!

உன்னால் மட்டுமே
செய்ய முடிந்த
பல வேலைகள்
மீதம் உள்ளன,

படையாய்,
இளைஞர்கள்
வருகிறோம்,
உனக்கு குடையாய்,
கொடுப்பாய் உந்தன்
பண்புகளை,கொள்கைகளை
எங்களுக்கு கொடையாய்...!
- பிரகாஷ் பாரதி

No comments:

Post a Comment