Wednesday 14 December 2011

அரசியல்வாதி !


அரசியல்வாதி!


அரசியல்வாதி!
இந்த சொல் 
கேட்டாலே பீதி,


யார் இவன்?
எங்கிருந்து வந்தான்?
எப்படி முளைத்தான்?
இவன் கொள்கை என்ன?
இவன் எப்படிபட்டவன்?
இவன் நீதி என்ன?
இவன் பெயர் தான் என்ன? 


யார் இவன்?
இவனும் மனிதன் தான்,
இவனுக்கு என்று 
ஒரு இதயமும்,
அதற்குள் 
மனசாட்சியும் இருந்த வரை,....


எங்கிருந்து வந்தான்?
நம்மை போல 
கருவறை தான் 
இவன் பிறப்பிடம்,
இவன் வளர்ப்பிடம் 
கழிவறையாக 
இருந்திருக்கலாம்,
இன்னமும் அழுக்காகத்தான் 
இருக்கிறான்,
உள்ளத்திலும், உடலிலும்,....


எப்படி முளைத்தான்?
நாம் விதைத்த 
விதையில் 
முளைதவன்தான்,
நாம் ஊற்றிய 
தண்ணீரில் வளர்ந்தவன் தான்,
ஆனால் 
நாம் இவனை 
விதைத்தது 
மண்ணில்,
இவனோ மண்ணில் 
வளராமல்,
பொன்னில் வளர நினைக்கிறான்,
சில நேரங்களில் பெண்ணிலும்,.............


இவன் கொள்கை என்ன?
கொள்கை என்றால் என்ன?...
என்று கேட்க்கும் 
நிலையில் தான் 
இவன் கொள்கை,
அதுவே இவன் 
கொள்கை, 
நிலைமை இப்படி இருக்க,
கொள்கை பரப்பிற்கு 
தனியாக ஆட்கள்,.....


இவன் எப்படிபட்டவன்?
இவன் நாலும் தெரிந்தவன்,
பொய், சூது, லஞ்சம், நம்பிக்கை துரோகம்...
இந்த நான்கு 
வேதங்களிலும், 
தேர்ச்சி பெற்றவன்,
தேர்தல் நேரத்தில் மட்டும் 
பிச்சைக்காரன்,
கை ஏந்தி அல்ல 
கை கூப்பி,...


இவன் நீதி என்ன?
நீதிமன்றத்தை 
அவமதிப்பதே 
இவன் நீதி,...........


இவன் பெயர் தான் என்ன? 
எந்த பெயரை  சொல்ல?


தேர்தல் நேரத்தில் பிச்சைக்காரன்,
தேர்தல் வாக்குறுதி 
அளிப்பதில் பொய்க்காரன்,
வெற்றி பெற்றபின் 
நன்றி மறந்தவன்,
ஆட்சி செய்கையில் 
நம்பிக்கை துரோகி,.....
சொல்லிக்கொண்டே போகலாம்......................


'ரன்'  'ரன்' என்று 
குறிப்பிடுவதால் ஆண்களை 
மட்டும் குறிப்பிடுவன அல்ல,
எந்த பாலினம் 
ஆனாலும் 
அரசியல்வாதி அரசியல்வாதிதானே!


நான் கூறி இருப்பது 
நல்ல அரசியல்வாதிகளை அல்ல.....!!!




எது எப்படி இருந்தால் 
நமக்கு என்ன?
நமக்கு 
கிரிக்கெட்டில் 
இந்திய வெற்றி பெற்றால் 
அது தானே
நம் தேச பக்தி...?


                  - பிரகாஷ் பாரதி 

1 comment:

  1. தேர்தல் நேரத்தில் பிச்சைக்காரன்,
    தேர்தல் வாக்குறுதி
    அளிப்பதில் பொய்க்காரன்,
    வெற்றி பெற்றபின்
    நன்றி மறந்தவன்,
    ஆட்சி செய்கையில்
    நம்பிக்கை துரோகி,.....
    சொல்லிக்கொண்டே போகலாம்......................



    உண்மை .....உன் மொழியில் அருமை ...

    ReplyDelete